Tuesday, January 22, 2008

புதிய சந்தர்ப்பம் தருவது வேதாகமமே

சாகும் மனிதனுக்கு மீண்டும் வாழ்வு வேண்டுமா?

பிரச்சினை உள்ள மனிதருக்கு பிரச்சினையிலிருந்து மீள வேண்டுமா?

பாவக்கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?

மந்திர தந்திர, பில்லி சூனிய, பேய் பிசாசுகளிலிருந்து விடுதலை வேண்டுமா?

வெற்றியை தேடுகிறீர்களா?


இவற்றிற்கு பதிலை நீங்கள் எதிர்பாருங்கள் பரிசுத்த வேதாகமத்தில். வேதாகமத்தை வாசித்து பாருங்கள். அங்கு பிசாசுகளுக்கு நடந்த காரியங்களை,

ஆக உங்களுக்கு விடுதலையை தரக்ககூடிய வழி காட்டுகின்றது பரிசுத்த வேதாகமம். ஆகவே இன்னும் ஏன் தாமதம் வேதாகமத்தை வாசியுங்கள். நான் சொல்லவில்லை வேதாகமத்தை நீங்கள் வாசிக்காவிட்டால் நீங்கள் வெற்றியடைய முடியாது என்று. ஆனால் வேதாகமம் தேவனுடைய வார்த்தையானதால் அந்த வார்த்தை தேவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. அது பாவியை பாவி என உணர்த்தும். பாவ வாழ்விலிருந்து விடுபட உதவும்.

பாவத்தில் வாழ்வோருக்கே வேதாகமம் ஒரு பாவற்காய். தம்மால் உண்மையை உணர முடியாதவர்களுக்கே வேதாகமம் ஒரு பொய்யான புத்தகம். தமது பாவத்தையும் அசுத்தத்தையும் விட முடியாதவர்களுக்கே வேதாகமம் எரிச்சலை தரும். பிசாசோடும் அவன் காரியங்களோடும் இணைந்திருப்பவர்களுக்கே வேதாகமம் ஒரு எதிர்ப்பு சக்தி.



ஆக வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றது என கூறும் போது வேதாகமத்தை வாசித்து பாருங்கள். அங்கே நீங்கள் முத்துக்களை கண்டடைவீர்கள். உங்கள் வாழ்வை நலமாக்கிடுவீர்கள்.

No comments: