Thursday, January 8, 2009

சிறந்த பொருளாதாரம்

உலகப் பொருளாதாரங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பல்வேறு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலினது வளர்ச்சியானது மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. பாரியளவிலான பொருளாதார ரீதியான வளர்ச்சியை கொண்ட ஓர் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. அதன் பல்வேறு வித உற்பத்திகளின் வெளிப்பாடாக அதனது பொருளாதார வளர்ச்சியின் நிலைமை உயர்ந்து செல்கின்றது. உலகின் அனைத்து உற்பத்திகளிலும் தாய் உற்பத்தி நாடாக இன்று தனது உற்பத்தியை திறம்பட செய்துவருகின்றது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது போன்று எந்த நாட்டிலிருந்தும் எவ்விதமான பொருளும் இஸ்ரேலுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் எல்லாவிதமான உற்பத்திகளிலும் தலையாய இடத்தை இஸ்ரேல் கொண்டுள்ளது. அதே வேளையில் இஸ்ரேலினது உற்பத்திகளை பெற்றுக்கொள்ள பல வளர்ச்சியடைந்த நாடுகள் பெரும் முயற்சியெடுத்து வருகின்றன. ஓர் சிறிய நாட்டினது இவ்விதமான உற்பத்திப்பாங்கை வைத்து பார்க்கின்றபோது அவர்களை ஆண்டுகொள்கின்ற அவர்களது மெய்க் கடவுளின் ஆசியின் காரணமாகவே இவையெல்லாம் இஸ்ரேலிற்கு இலகுவாக மாறியுள்ளன எனலாம்.
எந்த ஒரு நாடும் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது இறைவனை காரணம் காட்டமுடியாது. எந்த ஒரு புனித புத்தகமும் அந்த புத்தகத்தின் மீதாக ஒரு நாட்டை பற்றிய கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஆனால் இஸ்ரேலைக் குறித்த அக்கறை இந்த உலகைப் படைத்த தேவனுக்கு இருக்கின்றது. ஆகவே இஸ்ரேலை மாபெரும் பரிசுத்த தேசமாக இறைவன் வகுத்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் இஸ்ரேலில் வாழும் குடிமக்களுக்கு அல்ல. மாறாக அவர்கள் தேவனுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இஸ்ரேலின் தேவனாகவே தம்மை வெளிப்படுத்தும் இந்த உலகத்தின் கர்த்தரானவர் தாம் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் ஜாதியினூடாகவே இந்த முழு உலகிற்கும் சமாதானத்தை அளிக்க விரும்புகிறார். ஆனால் அவர் தாம் தெரிந்து கொண்ட தமது இஸ்ரவேல் ஜனங்களை எவர்கள் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு அவர் தாம் வேதாகமத்தில் கூறியபடி சாபத்தை அனுப்ப தாமதமாகிறதில்லை. இந்த செய்தியானது முழு கிறிஸ்தவர்களும் அறிந்தபடியினால் அவர்கள் மாம்சத்திற்காக ஓர் போதும் போரிட வேண்டிய அவசியம் இல்லை என இயேசுக்கிறிஸ்துவால் கூறப்பட்டுள்ளது. இந்த உலகம் நிலையில்லாதது ஆதலால் அதற்காக போரிட வேண்டிய தேவை கிறிஸ்தவர்களுக்கு இல்லை என்ற காரணமாகவும் இந்த உலகத்தில் உங்களுக்கு சொத்துக்களை சேர்க்க வேண்டாம் என இயேசுக்கிறிஸ்து கூறிய காரணத்தினாலும் கிறிஸ்தவர்கள் இந்த உலகை குறித்த கவலையடைய தேவையில்லை.
மாறாக, மரணகாலத்தின் பின் தங்களுக்கு பரலோகத்தில் ஆயத்தமாக்கப்பட்டுள்ள ஸ்தலங்களில் தங்குவதற்கு இப்போதே பாடுபட்டு செயல் பட வேண்டும் எனபதே தேவனின் கட்டளையாகும். ஏனெனில் ஒவ்வொர் மனிதனுக்கும் ஓர் குறிப்பிட்ட வாழ்நாட்களே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. இறைவன் கொடுத்த உயிரை இறைவனுக்கு நாமே உயிர்பலியாக கொடுப்பதன் மூலமாக இறைவன் சந்தோஷமடையப்போவதில்லை. இந்த உலகில் வாழும் காலங்களில் இறைவனை திருப்திப்படுத்த அவரது வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதே முக்கியம். மாறாக போதகர்கள் தங்கள் கள்ளப் போதகங்களால் உங்களை மாற்றுவார்கள். அவர்கள் உலகிற்கு உங்களை பலியாக்குவார்கள். மனித வார்த்தையை நம்பி உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்.
இறைவன் தமது வார்த்தையை எவ்வாறு மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றார் என்பதை அறிய ஆவலாய் பலர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகிற்குள் இயேசுக்கிறிஸ்து வந்தததன் காரணமே இறைவனது வார்த்தையை இந்த உலக மக்களுக்கு அறிவிக்கவே. அது போலவே இறைவனால் தரப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் இறைவனது வார்த்தைகளை மனிதன் மறந்து விடாதபடிக்கு எழுத்தில் தரப்பட்டுள்ளன. மாறாக பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தவறுகளை, மனித முயலாமையை, காரணம் கூறமுடியாத அற்புதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டுபிடித்து கூறும்படியாக இறைவன் மனிதனுக்கு இந்த புத்தகத்தை அருளவில்லை. ஏனெனில் இறைவன் தவறுகள் அற்ற விதத்திலேயே வேதாகமத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாற்பதுக்கும் அதிகமானோரை கொண்டு ஓர் நீண்ட காலமாக தமது வார்த்தைகளை அறிவித்துள்ளதனை எழுதப்பட்டுள்ள புத்தகமாக தந்துள்ளார். (இறைவன் ஒரு போதும் தவறுகளை விடப்போவதில்லை என்பது ஒரு சின்னக் குழந்தைக்கும் தெரிந்த விடயம்!) இவ்விதமாக இறைவனது வார்த்தை உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்க்கங்கள், விவாதங்கள் மதத்திற்கு அவசியமற்றவை. ஆனால் அவசியம் என கருதினால் நீங்கள் உண்மையாக எந்தவொரு மதத்தையும் குறித்த அறிவற்றவர்களாகவே இருக்கிறீர்கள் என்று பொருள்படும். அதற்காக மதமே வேண்டாம் என நீங்கள் இருப்பீர்களாயின் உங்களை படைத்த இறைவனை நீங்கள் மறுதலிப்பவர்களாயிருப்பீர்கள். விவாதங்கள், தர்க்கங்கள் என்பன வாய்மூல யுத்தத்திற்குரிய ஆயுதங்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஏவுகணைகள் சரீரத்தை கொல்லும் ஆயுதங்கள் போன்றஇந்த எல்லாம் மதத்திற்கு அவசியமற்றவை. இவைகள் மதத்திற்கு அவசியம் என கருதினால் உங்கள் மதத்தில் எங்கோ சாத்தானின் செயல்பாடுகள் இருக்கின்றது. சாத்தானை மிதித்த இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை வெற்றி இன்றும் சாத்தானை ஜெயிப்பதற்கு போதுமானதாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ செய்தியானது உலகத்தையோ, மனிதர்களையோ கொள்ளையடித்து வாழும் வாழ்க்கையை காட்டவில்லை. ஏனெனில் கிறிஸ்தவர்களின் செயல்பாட்டிற்குரிய விதத்திலேயே இறைவன் கிறிஸ்தவர்களை நடத்துவார். கிறிஸ்தவர்கள் வன்முறையை கையாண்டால் அதே வன்முறையை கிறிஸ்தவர்கள் மேல் எழும்ப தேவன் செய்வார். கிறிஸ்தவர்கள் அன்பை விதைப்பார்களானால் தேவன் அவர்களுக்காக அவர்கள் எதிரிகளை சூறையாடுவார். ஏனெனில் தேவனுடைய கட்டளையானது நீங்கள் பழிவாங்க தகுதியற்றவர்கள். நானே பழிவாங்குவேன் என தேவன் கூறியுள்ளார்.
தேவனுடைய பிள்ளைகளான எமது செயற்பாடுகள் ஆர்பாட்டமிடுவதோ, பழிவாங்குவதோ அல்ல. நாம் தேவனுடைய சத்தம் தொனிக்கும் வரை அமர்ந்திருக்க வேண்டியவர்களாக இருப்பது அவசியம். ஆனால் எப்போது தேவனுடைய சத்தம் செய்யும் படியாக கூறப்படுகின்றதோ அப்போது செய்ய தாமதிக்கவும் கூடாது. அது தேவன் தரும் மாபெரும் வெற்றி என்பதை கிறிஸ்தவர்கள் மறந்து போகக்கூடாது. மனிதருடைய நினைவுகள் அவருடைய நினைவுகளாக இல்லை என தேவன் கூறியுள்ளார். தேவன் எமக்கு வெற்றியை தருவது நாம் அவருடைய வேதத்திற்கு கீழ்ப்படியும் போதும், அவருடைய குமாரன் கிறிஸ்துவை விசுவாசிப்பதும் , பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுப்பதுமாகும். அப்போது உலகம் எதிர்பாராத வண்ணமான வெற்றி நிச்சயம் உண்டு.

No comments: