Wednesday, February 14, 2018

Jesus Tamil: எபிரேயர் 11:9-10

Jesus Tamil: எபிரேயர் 11:9-10: விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும்...

Jesus Tamil: திருமணத்திற்கான காதல் நலம் ஆகும்

Jesus Tamil: திருமணத்திற்கான காதல் நலம் ஆகும்: உலகிலுள்ள உயிரினங்களை ஆண்டுகொள்ள மனிதன் உலகில் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே அவற்றிற்கு பெயரிடும் பொறுப்பினை முதல் மனிதன் பெற்றுக் கொண்டான். ப...

Jesus Tamil: திருமணத்திற்கான காதல் நலம் ஆகும்

Jesus Tamil: திருமணத்திற்கான காதல் நலம் ஆகும்: உலகிலுள்ள உயிரினங்களை ஆண்டுகொள்ள மனிதன் உலகில் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே அவற்றிற்கு பெயரிடும் பொறுப்பினை முதல் மனிதன் பெற்றுக் கொண்டான். ப...

Sunday, June 26, 2011

uyir

உலகின் பெருமை மிக்க 90 வீதத்திற்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள்.யூதர்களின் கண்டுபிடிப்புக்களை பயன்படுத்தா மனிதர் உலகிலில்லை.யூதர்களின் Facebook கூட இன்று அதிகளவானோரின் பொழுதுபோக்கு வெப்தளமாக அமைந்துள்ளது.யூதர்களின் கண்டுபிடிப்புக்களைத் தான் இன்றைய உலகம் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றது.அப்படியானால் விஞ்ஞான உலகை உருவாக்கியதே யூதர்கள் என்றால் அதற்கு காரணம் என்ன?யூதர்களுக்கு ஒரு சிறந்த அறிவு கிடைத்தது எப்படீ ? அவர்களுடைய உயிருள்ள ஏக இறைவனின் செயலே அதற்கு காரணம். அத்தோடு வேதாகமத்தையும் கூறலாம்.ஆக யூதர்கள் கண்பிடிக்க கண்டுபிடிக்க வேதாகமம் பெரிதும் உதவியது. விஞ்ஞானத்தை வேதாகம அறிவே கண்டுபிடித்து தந்தது.யூதர்களை குற்றம் சாட்டுபவர்கள் அவர்களது கண்டுபிடிப்புக்களை உதறி தள்ளுவார்களாயின் அவர்கள் வெறும் துண்டுடன் இருண்ட கண்டத்துக்குள் தான் இருக்க வேண்டும்.யுதர் துன்புற்று அழித்தும் மீண்டும் பீனிக்ஸ் பறவைகளாய் எழுவர். காரணம் இயேசு கிறிஸ்துவின் முன்னுதாரணம். யூதரும் உயிர்த்தனர். கிறிஸ்துவும் உயிர்த்தவர். ஆதலால் விஞ்ஞானம் தந்த வேதாகமம் கடவுளின் உயிருள்ள வார்த்தை. புத்தகங்கள் தந்த விஞ்ஞானம் மனிதரின் அஞ்ஞான வார்த்தை்

Saturday, June 25, 2011

sri lanka

Http://UYIRchristian.tk http://UYIRchristiannet.tk http://tamilchristian.tk http://UYIR.tk
Follow the article on www.UYIR.2k00.com christian news from the bible torah . The world not known the real. The bible gives us government rules. We must obey to Gods word, it is written in the bible. வேதாகமம் குறிப்பாக பழைய ஏற்பாடு இஸ்ரயேலருக்கு ஆட்சி நடத்தும் கட்டளைகளை கொடுத்துள்ளது.

எல்லா கட்டளைகளும் ஏக இறைவனால் தரப்பட்டது.

கட்டளைகளை பெற மோசே 40 நாட்கள் இறை சமூகத்திற்கு இறைவனால் அழைக்கப்பட்ட இடம் இஸ்ராயேல் தேசத்திலுள்ளது.

இஸ்ரயேல் சமுதாயம் இற்றை வரைக்கும் கடைபிடிக்க வேண்டிய ஆட்சிப் புத்தகம் வேதாகமத்தில் காணப்படும் முதல் 5 புத்தகங்களாகும்.

5 புத்தகங்கள் வெறுமனே புனிதமானவை மட்டுமல்ல. அவை அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் உட்பட்ட பல்லாண்டுகட்கு முன் ஏக இறைவன் அருளிய சட்டதிட்டங்களாகும்.

இவற்றை விட ஏக இறைவன் வேறு புத்தகங்களை கட்டளைப் பாணியில் வேறெங்கும் அருளவில்லை. தோரா எனப்படும் வேதாகமத்தின் முதல் 5 நூல்களை யாராலும் அற்பமாக கருத முடியாது.
தொடரும்...

Wednesday, June 22, 2011

நாம் குழந்தைகளா

உறவை பிரித்த சக மனிதன்
பகைத்தான் பன்நெடுங் பல்லாண்டு
வதைத்தவனை வதைத்து
வெற்றியுடன் வந்தும் வதைத்தான்

நிம்மதி கெடுத்த இராணுவம்
உருவாக்கிய எழச்சித் தொண்டர்கள்
வீழ்ந்து மக்கிப் போயினும்
விட்டபாடில்லை இரத்தகுடி பிசாசு

சின்னத் தீவில் இல்லா ஐக்கியம்
கிடைக்குமா ஐ.நா இராச்சியத்தில்
செய்வதற்கெல்லாம் சர்வதேசமும்
இடமளிக்க நாமென்ன குழந்தைகளா

அதையும் தாண்டி

வெள்ளைக் கொடி
கேட்டால் பயம்

சணல் போ
பார்க்க பயம்

பான் கீ மூன்
சொல்ல பயம்

தமிழர் வாழ்வு
தலை காட்ட பயம்

இப்பிடி பயந்தால்

எமக்கு


அதை தாண்ட வேண்டும் திடமஂ

Friday, February 26, 2010

மடல்

மன்னிக்கவும் மனவேதனையுடன் மனோ...

மனசுக்குள் மக்கிய மலர்
மாவைத்த மண்பாண்டங்கள்
மண்ணோடு மறந்த மனைவி
மறைந்துவிட்ட மரண மண்

மாய்த்தனர் மன்னார் மணலில்
மாதங்கள் மடங்கி மறைவாயின
மக்களும் மனைகளை மறந்தனர்
மாங்காய் மரமும் மரத்தது

மற்றவற்றை மாண்போடு மாற்றிடுவேன்
மாற்றுங்கள் மன்னவன் மனக்காயங்களை
மலேசியாவில் மரணதண்டணை
மார்பிலிருந்து மரணவோலம்

மற்றவை மலரும்
மன்னிக்கவும்
மலர்விட்டு மலர்தாவிய
ம. மனோவிற்கு

Tuesday, September 1, 2009

இலங்கை மக்கள்

துயரத்திலும் மகிழ்வுடேன்

இருப்பதற்கு

நாம் என்ன செய்ய வேண்டுன்?

எம்மால் செய்யக்குஉடியது என்ன?

விரைவாக வேண்டும்..

அவர்ளுக்கு உதவிகள்...


???

Thursday, June 4, 2009

தேவனுடைய பலத்த கரம்

இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமங்கள், பாவ சிந்தனைகள் பெருகிய போது தேவன் அவர்களை ஏனைய ஜாதிகளிடத்தில் சிதறடித்தார். அவர்கள் ஏனைய ஜாதியினரிடம் சிறைப்பட்டுப் போவதற்கு அவர்களது பாவங்களே காரணமாக அமைந்தன. சிறைப்பட்டுப் போன யூதர்கள் அந்த ஜாதிகளால் முழுவதுமாக அழிக்கப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் ஏனைய ஜாதியினரால் பறிக்கப்பட்டன. “ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்” (லேவியராகமம் 26:19) யூதர்கள் சிதற அடிக்கப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் பின்னாக ஜாதிகள் பட்டயத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு யூதனும் மரித்துப் போவதற்கு தேவனுடைய இந்த எச்சரிப்புக்களை விட்டு அவர்கள் விலகியதே காரணமாக இருக்கின்றது. அவன் எதனை செய்யக்கூடாததாயிருந்தது. “நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:” (லேவியராகமம் 26:14-15) 1. இஸ்ரவேலர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுக்காமற் போனார்கள். 2. தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் முழுமையாக செய்ய விரும்பவில்லை. 3. அவர்கள் தேவனுடைய கட்டளைகளை வெறுத்தார்கள். 4. அவர்கள் நியாயங்களைஅரோசித்தார்கள். 5. கற்பனைகள் எல்லாவற்றையும் செய்யவில்லை 6. முடிவாக அவரது உடன்படிக்கையை மீறிப்போட்டார்கள். இவ்விதமாக செய்யும் போது தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுகின்றது. இவ்விதமாக தேவனுக்கு விரோதமான காரியங்களின் காரணமாக இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த தேசத்திலிருந்து வேறு தேசங்களுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. அவர்கள் தங்கள் ஜீவனுள்ள தேவனிடமிருந்து செல்ல வேண்டியதாக இருந்தது. “நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள். உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள். துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்” (லேவியராகமம் 26:17) இவ்விதமான சிறிய தண்டனைகளுக்கும் அவர்கள் செவிகொடுக்காவிட்டால் தேவனால் மேலும் தண்டிக்கப்படுவார்கள். “நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,..” (லேவியராகமம் 26:21) இவ்விதமாக தேவனுடைய கோபம் அவர்கள் மேலாக வரும். இவ்வித வாதையை யூதருக்கு வருவதைக் கண்டு அவர்களோடு இருந்தும் தேவனை அறியாத ஏனைய ஜாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்கும். பிற ஜாதிகள் பிரமிப்பார்கள். “நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்” (லேவியராகமம் 26:32) இன்னும் பல வாதைகளை தேவன் அவர்களுக்கு செய்வேன் என எச்சரிக்கின்றார். இவை பிற தேசங்களில் நடக்கும் போது அவர்களுடைய தேசமான இஸ்ரேல் தேசம் ஓய்வாக இருக்கும். அவர்கள் தங்கள் தேசத்திற்கு ஓய்வு கொடுக்காதபடியினால் இப்போது ஓய்வடைந்திருக்கும். “நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினால், அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.” (லேவியராகமம் 26:34-35) இவ்விதமாக தேவனின் கோபத்தினால் அவர்கள் புற தேசங்களில் தங்கியிருப்பதோடு அங்கு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்வர். அத் தேசத்தார்கள் அவர்களுக்கு எதிராக காரியங்களை செய்வார்கள். இவ்விதமான காரியம் வேதாகமத்தில் 6,000 ஆயிரம் வருடங்களுக்கும் முன்னராகவே மோசேயினால் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இது மோசேயினுடைய வார்த்தைகள் அல்ல. தேவனால் மோசேயினூடாக அறிவிக்கப்பட்டது. பரிசுத்த வேதாகமத்தில் இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. தேவன் தம்முடைய ஜனங்களுக்கு இவ்விதமாக அவர்கள் தேவனை மறந்து போனால் இவ்வாறு நடைபெறும் என கூறியிருந்தார். பல முறை அவர் தம்முடைய மக்களை எச்சரிக்க பல தீர்க்கர்களை இஸ்ரவேலிலே எழும்பப்பண்ணினார். வேதாகமத்தில் வருகின்ற அனைத்து தீர்க்கர்களும் இஸ்ரவேலிலேயே எழும்பியுள்ளனர். இஸ்ரவேல் தேசத்திலிருந்து வராத எவரும் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அல்லவென்பது இதன் மூலமாக தெளிவாகும். இயேசுக்கிறிஸ்து எனும் தேவனுடைய மாம்ச வெளிப்பாடானது இஸ்ரவேல் தேசத்திலேயே வெளிப்பட்டது. ஏனெனில் தேவன் தம் கட்டளைகளை மக்களுக்கு கொடுத்து அவர்கள் அதினை கடைபிடிக்க தடுமாறும் போது தேவன் அவர்கள் மேல் இரக்கங் கூற வேண்டியதாக இருந்தது. ஓரே உயிருள்ள ஜீவனாகிய இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமின் தேவனாக இருந்தார். ஆபிரகாமோடு பேசியவர் ஈசாக்கோடு பேசினார். யாக்கோபோடு பேசினார். மோசேயோடு பேசினார். இன்றும் அவர் பேச வல்லராக இருக்கின்றார். ஏனெனில் ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய ஒரு ஜாதி இஸ்ரவேல் ஜாதி மட்டுமே. அந்த ஜாதியை ஏற்றுக்கொள்ளும் ஏனைய ஜாதிகளுக்கும் அந்த சந்தர்ப்பம் இலவசமாக வழங்கப்படுகின்றது. இஸ்ரவேல் ஜாதியாரை எந்த ஜாதி ஏற்றுக் கொள்ளுகின்றதோ அந்த ஜாதிகள் அவர்கள் மூலமாக ஆசீர்வாதத்தை பெறுகின்றன. அன்று ஆபிரகாமுக்கு ஆசீர்வாதத்தை தேவன் கட்டளையிட்டபோது அவனது சந்ததியாருக்கும் அந்த ஆசீர்வாதம் கடந்து வருகின்றது. ஆபிரகாம் மரித்துப் போனான். அவனது சந்ததிகளும் மரித்துப் போயினர். தற்போது ஆபிரகாமின் புதிய சந்ததியினர் ஈசாக்கின் மூலமாக யாக்கோபின் மூலமாக இன்றும் இஸ்ரவேல் தேசத்தில் குடியிருக்கின்றனர். அவர்கள் தங்கள் தேவனை பின்பற்றியபடியினால் மீண்டும் தங்கள் தேசங்களிற்கு தேவனால் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதினால் தான் எந்த ஒரு நாடும் அவர்களுக்கு எதிராக எந்த சூழ்ச்சியையும் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது. 1948ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நாடுகள் அவர்களுக்கு எதிராக உள்ளன. எதிராக உள்ள நாடுகள் இன்று இஸ்ரவேலரின் தேவனுக்கு எதிராகவே உள்ளன. இஸ்ரவேலரது இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையின் காரணமாக இஸ்ரவேலரை மேற்கொள்ள முடியவில்லை. இஸ்ரவேலரின் வெற்றியின் இரகசியமானது அவர்களது பெலனல்ல. அமெரிக்காவின் உதவிகள் அல்ல. மாறாக அவர்களது ஜீவனுள்ள தேவனின் மோலான அவர்களது நம்பிக்கையே. உலக நாடுகள் கைவிடலாம். அமெரிக்கா கைவிடலாம். ரஷ்யா தனது படைகளை எதிர்காலத்தில் இஸ்ரவேலில் கொண்டு வந்து நிறுத்தலாம். ஆனால் ஜீவனுள்ள தேவனின் பலத்த கரம் அவர்களோடு இருந்தால்… ஜீவனின் அதிபதியான உலகத்தின் மீட்பராம் இயேசுக்கிறிஸ்துவின் பிதாவான பரலோக தேவனுக்கு முன்பாக இஸ்ரவேல் எனும் தேசம் ஒரு போதும் எந்த எதிரிகளின் மூலமாகவோ அசைக்கப்படாது. தேவனுடைய பலத்த கரமே இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்யும். இஸ்ரவேலர் எழும்பும் முன்னரே தேவனாகிய கர்த்தர் அவர்களுக்காக அவர்களது எதிரிகளை முறியடிப்பார். உலகமோ அல்லது சாத்தானோ இஸ்ரவேலை ஒன்றும் செய்ய முடியாது. உலகத்திலுள்ளவர்களை விட எங்கள் தேவன் பெரியவர் என்று இஸ்ரேல் சொல்லுகிறது. “தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ. அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது. உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார். அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். ஆகையால், உயர வானத்திலும் தாழ ப+மியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்”. (உபாகமம் 4:32-40)
source www.tamilchristian.tk

இறுதி வருகை

அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.
உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாக கிறிஸ்துவின் இராஜரீகமான வருகை அமையவுள்ளது. இயேசுவை எதிர்த்தோர் அவரை காணப்போகின்றார்கள். இயேசுகிறிஸ்துவை ஏசியவர்கள், எதிர்த்தவர்கள், அவமதித்தவர்கள் அவரைக் காணப்போகின்றார்கள். அப்போது அவர்களின் நிலை என்ன? மத்தேயு 25:31ல் கூறப்படும் இக்காரியம் எதைப்பற்றி கூறுகின்றது. உலகிற்கு இறைவன் மனித சாயலாக மனிதன் காணும் வண்ணமாகவே வந்ததால் அவரது வெளிப்பாடு இங்கு மனுஷகுமாரன் எனப்படுகின்றது. இயேசுக்கிறிஸ்துவே இவ்வுலகின் படைப்பாளராவார். அவர் பாவிகளின் கைகளினால் மரணத்தை தழுவினார். ஆனாலும் அவர் இறைவன் என்பதினால் மரணத்திலிருந்து ஜெயம்கொண்டவராக மனுஷகுமாரன் உயிரோடு எழும்பினார். மரணம் மனிதர்களை மாத்திரமே மரணிக்க வைக்கலாம். இறைவனால் மனிதனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட மரணத்தை இறைவன் மனிதன் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக மனிதனாக வந்து மரணத்தை எதிர்கொண்டு வெற்றி சிறந்து காட்டினார். இது இயேசுவை கொலைசெய்த மனிதர்களுக்கு கிட்டிய வெற்றியல்ல. மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கத்தக்கவர் தான் என்பதை காட்டிக்கொடுத்த கிறிஸ்துவின் வெற்றியே ஆகும். இவ்வாறு மரணத்தை வெற்றிகொண்ட இறைவனை விசுவாசிப்பதன் மூலமாக நாமும் மரணத்தை வெற்றிக்கொள்ள முடியும். புதிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பமே இங்கு தரப்படுவதற்காகவே உள்ளது. கிறிஸ்து உலகிற்கு வரப்போகும் நாள் மிகவும் தொலைவிலில்லை. அது மிகவும் அருகிலிருக்கின்றது. அந்நாளை யாரும் அறியார். சிலவேளைகளில் இதை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவோ கூட இடம்பெற்றிருக்கலாம். அவரது வருகை பரிசுத்த தூதரோடுங்கூட இருக்கும் என வேதாகமம் கூறுகின்றது. அவர் சீக்கிரம் வரப்போகின்றார் என ஏற்கனவே வேதாகமம் எச்சரிக்கின்றது. இவ்வித தீர்க்கதரிசனங்களைக் கொண்ட புத்தகமாக இன்று இந்த உலகில் வேதாகமம் மட்டுமே உள்ளது. கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. அவருடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் சிலுவையில் அறையப்பட்ட கிறஸ்து இப்போது இராஜாவாக வீற்றிருக்கின்றார். இப்போது அவரை பற்றி நோக்குங்கள். அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அவர் முன் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். கிறிஸ்துவின் உயிர்ப்பை விசுவாசியாதவர்கள் அவர் முன் மௌனிகளாக இருக்க வேண்டி ஏற்படும். இயேசுவை அறிந்தும் அவரது செய்தியை தள்ளிய நீங்களும் அவருக்கு முன் என்ன செய்யப் போகின்றீர்கள்? அவர் இனி இராஜாவாக வாரப்போகின்றார். எப்போது அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரோ அப்போதிருந்தே அவர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து இந்த உலகை நோக்கிக்கொண்டிருக்கின்றார். இன்றைய நாட்களில் நாம் அவரது செயற்பாடுகளை அறிந்து கொள்கின்றோம். எவ்வாறு? கிறிஸ்து இன்றும் சபைகளில் தம்முடைய மக்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார். ஏன்? இன்னும் மக்கள் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டாலும் அவரை ஏற்க விரும்பவில்லை. வெறுமனே அற்புதங்களை மாத்திரம் நிகழ்த்தி தமது மாபெரும் மேன்மையை நீரூபிக்க வேண்டிய தேவை கொண்டவரல்ல சிங்காசனத்திலிருக்கும் இறைவன். அவரால் இந்த உலகை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறு அழிக்கவும் முடியும். ஆயினும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றார். அவர் சீக்கிரமாய் வரப்போகின்றார். அவரது வருகை இப்போதும் நிகழலாம். செய்யவேண்டியது ஒன்றே அவரை விசுவாசிப்பது மாத்திரமே. உங்களை ஆளுகிறவர்களை விட பெரிய வல்லமையுள்ளவர் வரும்போது எவ்வாறு அவர்களுக்கு ஆதரவளிப்பீர்களோ அவ்வாறு இந்த இறைமகனுக்கு ஆதரவளியுங்கள். அப்போது உங்கள் மரணத்தின் பின்னதான வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்துவோடு பரலோகில் உங்கள் நித்திய வாழ்க்கையை களிக்க முடியும்.
source www.tamilchristian.tk

Thursday, January 8, 2009

சிறந்த பொருளாதாரம்

உலகப் பொருளாதாரங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பல்வேறு நாடுகளின் மத்தியில் இஸ்ரேலினது வளர்ச்சியானது மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. பாரியளவிலான பொருளாதார ரீதியான வளர்ச்சியை கொண்ட ஓர் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. அதன் பல்வேறு வித உற்பத்திகளின் வெளிப்பாடாக அதனது பொருளாதார வளர்ச்சியின் நிலைமை உயர்ந்து செல்கின்றது. உலகின் அனைத்து உற்பத்திகளிலும் தாய் உற்பத்தி நாடாக இன்று தனது உற்பத்தியை திறம்பட செய்துவருகின்றது. வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது போன்று எந்த நாட்டிலிருந்தும் எவ்விதமான பொருளும் இஸ்ரேலுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம் எல்லாவிதமான உற்பத்திகளிலும் தலையாய இடத்தை இஸ்ரேல் கொண்டுள்ளது. அதே வேளையில் இஸ்ரேலினது உற்பத்திகளை பெற்றுக்கொள்ள பல வளர்ச்சியடைந்த நாடுகள் பெரும் முயற்சியெடுத்து வருகின்றன. ஓர் சிறிய நாட்டினது இவ்விதமான உற்பத்திப்பாங்கை வைத்து பார்க்கின்றபோது அவர்களை ஆண்டுகொள்கின்ற அவர்களது மெய்க் கடவுளின் ஆசியின் காரணமாகவே இவையெல்லாம் இஸ்ரேலிற்கு இலகுவாக மாறியுள்ளன எனலாம்.
எந்த ஒரு நாடும் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது இறைவனை காரணம் காட்டமுடியாது. எந்த ஒரு புனித புத்தகமும் அந்த புத்தகத்தின் மீதாக ஒரு நாட்டை பற்றிய கருத்துக்களை வெளியிட்டதில்லை. ஆனால் இஸ்ரேலைக் குறித்த அக்கறை இந்த உலகைப் படைத்த தேவனுக்கு இருக்கின்றது. ஆகவே இஸ்ரேலை மாபெரும் பரிசுத்த தேசமாக இறைவன் வகுத்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குபவர்கள் இஸ்ரேலில் வாழும் குடிமக்களுக்கு அல்ல. மாறாக அவர்கள் தேவனுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இஸ்ரேலின் தேவனாகவே தம்மை வெளிப்படுத்தும் இந்த உலகத்தின் கர்த்தரானவர் தாம் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் ஜாதியினூடாகவே இந்த முழு உலகிற்கும் சமாதானத்தை அளிக்க விரும்புகிறார். ஆனால் அவர் தாம் தெரிந்து கொண்ட தமது இஸ்ரவேல் ஜனங்களை எவர்கள் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு அவர் தாம் வேதாகமத்தில் கூறியபடி சாபத்தை அனுப்ப தாமதமாகிறதில்லை. இந்த செய்தியானது முழு கிறிஸ்தவர்களும் அறிந்தபடியினால் அவர்கள் மாம்சத்திற்காக ஓர் போதும் போரிட வேண்டிய அவசியம் இல்லை என இயேசுக்கிறிஸ்துவால் கூறப்பட்டுள்ளது. இந்த உலகம் நிலையில்லாதது ஆதலால் அதற்காக போரிட வேண்டிய தேவை கிறிஸ்தவர்களுக்கு இல்லை என்ற காரணமாகவும் இந்த உலகத்தில் உங்களுக்கு சொத்துக்களை சேர்க்க வேண்டாம் என இயேசுக்கிறிஸ்து கூறிய காரணத்தினாலும் கிறிஸ்தவர்கள் இந்த உலகை குறித்த கவலையடைய தேவையில்லை.
மாறாக, மரணகாலத்தின் பின் தங்களுக்கு பரலோகத்தில் ஆயத்தமாக்கப்பட்டுள்ள ஸ்தலங்களில் தங்குவதற்கு இப்போதே பாடுபட்டு செயல் பட வேண்டும் எனபதே தேவனின் கட்டளையாகும். ஏனெனில் ஒவ்வொர் மனிதனுக்கும் ஓர் குறிப்பிட்ட வாழ்நாட்களே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன. இறைவன் கொடுத்த உயிரை இறைவனுக்கு நாமே உயிர்பலியாக கொடுப்பதன் மூலமாக இறைவன் சந்தோஷமடையப்போவதில்லை. இந்த உலகில் வாழும் காலங்களில் இறைவனை திருப்திப்படுத்த அவரது வார்த்தைகளுக்கு செவி கொடுப்பதே முக்கியம். மாறாக போதகர்கள் தங்கள் கள்ளப் போதகங்களால் உங்களை மாற்றுவார்கள். அவர்கள் உலகிற்கு உங்களை பலியாக்குவார்கள். மனித வார்த்தையை நம்பி உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்.
இறைவன் தமது வார்த்தையை எவ்வாறு மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றார் என்பதை அறிய ஆவலாய் பலர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகிற்குள் இயேசுக்கிறிஸ்து வந்தததன் காரணமே இறைவனது வார்த்தையை இந்த உலக மக்களுக்கு அறிவிக்கவே. அது போலவே இறைவனால் தரப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் இறைவனது வார்த்தைகளை மனிதன் மறந்து விடாதபடிக்கு எழுத்தில் தரப்பட்டுள்ளன. மாறாக பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தவறுகளை, மனித முயலாமையை, காரணம் கூறமுடியாத அற்புதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டுபிடித்து கூறும்படியாக இறைவன் மனிதனுக்கு இந்த புத்தகத்தை அருளவில்லை. ஏனெனில் இறைவன் தவறுகள் அற்ற விதத்திலேயே வேதாகமத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாற்பதுக்கும் அதிகமானோரை கொண்டு ஓர் நீண்ட காலமாக தமது வார்த்தைகளை அறிவித்துள்ளதனை எழுதப்பட்டுள்ள புத்தகமாக தந்துள்ளார். (இறைவன் ஒரு போதும் தவறுகளை விடப்போவதில்லை என்பது ஒரு சின்னக் குழந்தைக்கும் தெரிந்த விடயம்!) இவ்விதமாக இறைவனது வார்த்தை உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்க்கங்கள், விவாதங்கள் மதத்திற்கு அவசியமற்றவை. ஆனால் அவசியம் என கருதினால் நீங்கள் உண்மையாக எந்தவொரு மதத்தையும் குறித்த அறிவற்றவர்களாகவே இருக்கிறீர்கள் என்று பொருள்படும். அதற்காக மதமே வேண்டாம் என நீங்கள் இருப்பீர்களாயின் உங்களை படைத்த இறைவனை நீங்கள் மறுதலிப்பவர்களாயிருப்பீர்கள். விவாதங்கள், தர்க்கங்கள் என்பன வாய்மூல யுத்தத்திற்குரிய ஆயுதங்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஏவுகணைகள் சரீரத்தை கொல்லும் ஆயுதங்கள் போன்றஇந்த எல்லாம் மதத்திற்கு அவசியமற்றவை. இவைகள் மதத்திற்கு அவசியம் என கருதினால் உங்கள் மதத்தில் எங்கோ சாத்தானின் செயல்பாடுகள் இருக்கின்றது. சாத்தானை மிதித்த இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை வெற்றி இன்றும் சாத்தானை ஜெயிப்பதற்கு போதுமானதாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ செய்தியானது உலகத்தையோ, மனிதர்களையோ கொள்ளையடித்து வாழும் வாழ்க்கையை காட்டவில்லை. ஏனெனில் கிறிஸ்தவர்களின் செயல்பாட்டிற்குரிய விதத்திலேயே இறைவன் கிறிஸ்தவர்களை நடத்துவார். கிறிஸ்தவர்கள் வன்முறையை கையாண்டால் அதே வன்முறையை கிறிஸ்தவர்கள் மேல் எழும்ப தேவன் செய்வார். கிறிஸ்தவர்கள் அன்பை விதைப்பார்களானால் தேவன் அவர்களுக்காக அவர்கள் எதிரிகளை சூறையாடுவார். ஏனெனில் தேவனுடைய கட்டளையானது நீங்கள் பழிவாங்க தகுதியற்றவர்கள். நானே பழிவாங்குவேன் என தேவன் கூறியுள்ளார்.
தேவனுடைய பிள்ளைகளான எமது செயற்பாடுகள் ஆர்பாட்டமிடுவதோ, பழிவாங்குவதோ அல்ல. நாம் தேவனுடைய சத்தம் தொனிக்கும் வரை அமர்ந்திருக்க வேண்டியவர்களாக இருப்பது அவசியம். ஆனால் எப்போது தேவனுடைய சத்தம் செய்யும் படியாக கூறப்படுகின்றதோ அப்போது செய்ய தாமதிக்கவும் கூடாது. அது தேவன் தரும் மாபெரும் வெற்றி என்பதை கிறிஸ்தவர்கள் மறந்து போகக்கூடாது. மனிதருடைய நினைவுகள் அவருடைய நினைவுகளாக இல்லை என தேவன் கூறியுள்ளார். தேவன் எமக்கு வெற்றியை தருவது நாம் அவருடைய வேதத்திற்கு கீழ்ப்படியும் போதும், அவருடைய குமாரன் கிறிஸ்துவை விசுவாசிப்பதும் , பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவிகொடுப்பதுமாகும். அப்போது உலகம் எதிர்பாராத வண்ணமான வெற்றி நிச்சயம் உண்டு.

Wednesday, December 31, 2008

இனிய புதுவருட வாழ்த்துக்கள்

2009ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த பிறந்த 2009ம் புத்தாண்டு
உங்கள் வாழ்வில் வசந்தத்தினை கொண்டு வரட்டும். உங்களுக்கு கிறிஸ்துவின் பரிபூரணமான
ஆசீர்வாதங்கள் கிடைப்பதாக. கிறிஸ்து தாமே உங்களையூம் உங்கள்
குடும்பங்களையூம் ஆசீர் வதிப்பாராக. தொடர்ந்தும் இந்த இணையதளத்துடன்
இணைந்திருங்கள். கர்த்தர் தாமே உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பாராக. இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, November 22, 2008

மன்னாதி மன்னரின் செய்தி

யார் இவர்? அவரது செய்தியா?

ஆம், உலகினை படைத்தவர் தந்த செய்தி. அவர் மன்னராக வரப்போகிறவர்.

எப்போது மன்னர் ஆக வரப்போகிறார்?

சீக்கிரம் அவரது வருகை சீக்கிரம்.

இதுவா செய்தி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அவரை வரவேற்க நான் என்ன செய்ய வேண்டும்?

ஆம் நீ செய்ய வேண்டிய முக்கிய காரியம் இருக்கின்றது. நீ அவரை உன் தெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் காணாத ஒருவரை எவ்வாறு தெய்வமாகக் கொள்ள முடியும்?

அவரை காண முடியாதவர்களாய் நாம் இருக்கலாம். ஆனால் அவரது கண்கள் எங்களை நோக்கிக் கொண்டிருக்கிறது.

அப்படியானால் அவரே எங்களுக்கு அந்த செய்தியை அறிவித்தால்?

ஆம் அவர் தனது செய்தியை ஏற்கனவே உலகிற்கு அறிவித்து விட்டார். அந்த செய்தியை புத்தக வடிவிலும் தந்திருக்கிறார்.

புத்தக வடிவிலா? நான் அதை வாசிக்க முடியுமா?

ஆம் பரிசுத்த வேதாகமம் என்பது அப்புத்தகமாகும். அதனை வாசித்தால் எல்லாம் புரியும்.

ஆனால் இந்த புத்தகம் பல மாறுதல்களுக்குட்பட்டுள்ளதே?

இல்லை. இதன் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் மாற்றப்படவில்லை.

தெளிவாக கூறுங்கள்?

வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் இந்த வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறும் வரைக்கும் இதனை ஒருவராலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது.

இந்த புத்தகத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்ளவிட்டால்?

அநேக சத்தியங்களை அறிய முடியாது போய்விடும். இறுதி காலத்தில் இயேசு மன்னராக வரும்போது கிறிஸ்தவர்களை குற்றஞ்சாட்ட நேரிடும்.

முக்கியமாக எதனை வாசிப்பது?

புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களை முதலில் வாசிக்க தொடங்கலாம். அங்கு கிறிஸ்துவின் போதனைகள் நேரிடையாக தரப்பட்டுள்ளது.

உலக இறுதிகாலத்தில் நடைபெறும் சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளதா?

ஆம், நிறையவே உள்ளது. பழைய ஏற்பாட்டிலும் உள்ளது. புதிய ஏற்பாட்டிலும் உள்ளது.

எந்த எந்த புத்தகங்களில் அதிகமாக உள்ளது?

புதிய ஏற்பாட்டின் வெளிப்படுத்தல் புத்தகம், பழைய ஏற்பாட்டில் ஏசாயா, எசேக்கியேல், தானியேல் புத்தகங்கள் மற்றும் சுவிசேஷ புத்தகங்களிலும் உள்ளது.

இவைகள் ஒன்றுக் கொன்று முரண்படுகின்றனவா?

இல்லவே இல்லை. பரிசுத்த வேதாகமத்தின் 66 புத்தகங்களும் 40ற்கு அதிகமானவர்களால் எழுதப்பட்டாலும், உண்மையான ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரான கர்த்தராக இருப்பதால் அவைகளில் முரண்பாடுகள் இல்லை.

பரிசுத்த ஆவியானவரின் செயல் பாடு பற்றி?

பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தின் மறைவான ஆசிரியர். அதுபோல தற்போது பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது விளங்கிக் கொள்வதற்கு அவர் உதவி செய்கிறார்.

எப்படியான உதவியை பரிசுத்த ஆவியானவர் செய்கிறார்?

நாம் பரிசுத்த வேதாகமத்தை விளங்கிக் கொள்வதற்கு, எமது பாவங்களை அறிக்கையிடுவதற்கு, எங்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் நியாயந்தீர்ப்பதற்கு, பாவங்களை உணர்த்துவதற்கு,

கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் உதவி செய்ய முடியுமா?

ஆம், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு அவர் உதவி செய்வார். பரிசுத்த வேதாகமத்தை விளங்கிக் கொள்ள உதவி செய்வார்.

பரிசுத்த வேதாகமத்தை எதிர்த்தால் நடைபெறுவது என்ன? மன்னிப்பை வேண்டினால்?

இறுதி கால நியாயத்தீர்ப்பில் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும். மன்னிப்பையும் தரக்கூடியவர். மன்னிப்பார்.

Friday, November 14, 2008

கன்மலையாம் கிறிஸ்து

அவர் பட்ட பாடுகள் குறித்து நாம் என்ன சொல்ல முடியும், அவர் பட்ட வேதனைகளை நாம் தாங்க முடியுமா. அவரது வாழ்வில் ஏர்பட்ட துயரங்களை எம்மால் சுமக்க முடியுமா.
ஆனால் அவர் எம் துயரங்களை சுமந்தார். எம் வேதனைகளை தாங்கினார். இதை என்னவென்று சொல்ல முடியும். சாத்தனை விழுத்த மனிதனிடம் துன்பங்களை அனுபவித்தார். சாத்தானிடமிருந்து மனிதனை மீட்க போராடினர்.
கடைசியில் சாத்தான் தோற்றான். ஆனால் இன்னமும் தனது தோல்வியை ஏற்காது மனிதனோடு போராடுகிறான்.
இறுதி நாட்களில் ஜேசு அவனை அளிப்பார். அதற்கு முன்னரே நீ கிருஸ்துவிடம் வர வேண்டும். இல்லாவிட்டால் பிசாசுடன் உன் ஆத்துமா அழியும்.

Saturday, May 24, 2008

மனித உரிமைகள் மதிக்கப்படும் இலங்கையில்

தினமும் அழிவுகள் சந்தித்து வந்த இலங்கையில் மறைமுகமாக மனித உரிமைகள் மீறப்பட்டு வந்தன எனும் உண்மை உலகிற்கு விளங்கிக் கொள்ள நாட்கள் அதிகம் சென்றிருக்கின்றது என்பது ஐநா வின் சமீப கால சம்பவங்கள் ஊடாக விளங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கின்றது.

ஐநாவில் மனித உரிமைகள் பற்றிய விவாதத்தில் இலங்கை தோல்வியடைந்தது எனக்கூறும் இலங்கை அரசு அது பற்றிய பலவித கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளது. மனித உரிமைத் தோல்விக்கும் புலிகளுக்கு முடிச்சு போட்டு பார்க்கின்றது

மனித உரிமைகள் சரியாக நிலைநாட்டப்பட்டிருக்கின்றது உண்மையானால் ஏன் வீணாக ஏனையோரை குற்றஞ்சாட்டவேண்டும். இதற்குத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பார்களோ??

மனித உரிமைகள் எக்காலத்தும் மதிக்கப்பட வேண்டியதொன்று. அதை மீறும் உரிமை இல்லை

Saturday, May 17, 2008

இது தானா இலங்கை

நாம் லங்கன்ஸ், டோன்ட் வொரி போ லிவிங் இன் ஸ்ரீ லங்கா..
லன்டனில் வாழ்ந்தால் என்ன லங்காவில் வாழ்ந்தால் என்ன.. எல்லாம் ஒரு சுகமே.
லண்டனிலும் தமிழன் கைது.
லங்காவிலும் தமிழன் கைது.
லண்டனில் கைதானால் சுகபோகம்
லங்காவில் கைதானால் அடி உதை

இப்போது கிழக்கில் நிம்மதி வரவேண்டும். கிழக்கே அமைதியாய் தூங்கு. ஆனால் எதிர்காலம் பற்றி சிந்தித்து முயற்சியெடு. ஏனெனில் இலங்கை அன்னை சமாதானத்தை எதிர்பார்க்கிறாள். சமாதானத்தை பெற்ற மகிழ்ச்சியை அன்னை முழுவதும் அனுபவிக்க நீயே சம்மதிக்க வேண்டும்.
இலங்கை அன்னை வடித்த கண்ணீருக்கு பதில் கிடைத்ததா? அன்னை அவள் உள்ளம் மகிழ்கின்றதா?
கிழக்கும் மேற்கும் ஒன்றாகியது சகோதரர் என்ற படியினாலா.. அல்லது இத்தனை நாட்கள் ஓங்கியிருந்த கொடூரம் மறைந்ததாலா?
வன்சினம், பொறாமை மறைந்ததால் சகோதர பாசம் தலைதூக்கியதோ..
என்றாலும் லங்காவே
எதிர்காலம் இன்றே

Wednesday, April 30, 2008

மீண்டும் ஓர் புதிய தவணையில் இலங்கை வேதாகம கல்லூரியோடு

இந்த தவணை மீண்டும் வேதாகம கல்லூரியோடு இணைந்து கொள்கின்றேன். இந்த முறையும் நல்லவிதமாக கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். சில பாடங்கள் சற்று கடினமாகத்தான் உள்ளது. ஆயினும் விடாமுயற்சி என் வாழ்க்கைக்கு உதவும் என்பது சாத்தியமே. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேல் செலவழிக்க வேண்டியதாயிருக்கும். கட்டுரை எழுதுவதற்கும் மேலதிக கற்றல் வேளைகளுக்கும் எனது நேரத்தில் பெரும்பகுதியை செலவழிக்க வேண்டியிருக்கும். ஆராய்ச்சி செய்வது என்பது எதிர்காலத்திற்கு துணைபுரியக் கூடிய ஒன்று என்பது என் சிந்தனை. ஆக இந்த மூன்று மாத காலங்கள் எனக்கு புதிய விடயங்களை கற்றுத்தரப்போகின்றது என்பது உண்மை. சில வாழ்வியல் அடையாளங்களை மாற்ற வேண்டிய காலப்பகுதியாகவும் இது உள்ளது காரணம் ஏற்கனவே கற்ற வருடங்களின் அனுபவங்களினால் நான் பெற்றுக்கொண்டவை இவைகளே. முற்றிலும் புதிய சிந்தனைகளை பெற்றுத்தரும் இந்த காலப்பகுதி என் வாழ்வியல் அனுபவங்களை சிறப்பாக்கும் காலப்பகுதியை உண்டாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆக என் கால்லூரி வாழ்வியலில் புத அனுபவங்களை பெற்றுத் தரும் இலங்கை வேதாகம கல்லூரிக்கு என் வாழத்துக்கள் என்றும் உண்டு.

Friday, April 25, 2008

சோதனைக் காலம்

இந்த உலகத்தில் இதுவொரு சோதனைக் காலம்.
அதில் எவ்வாறு மேற்கொள்வது என்பது அறிந்நு கொள்ள முடியாது தவிக்கின்றேன்.
வீழ்ந்து போகும் உள்ளங்கள்.
அதில் அழிந்து போகும் எண்ணங்கள்.
எவ்விதம் சோதனையிலிருந்து தப்பிப்பது.
மனம் அலைந்து திரிகிறது.
பாலைவன சூட்டில் கருகிறது.
எனக்கு ஏன் என்று தெரியவில்லை.
நான் இப்போது நேயமுடன் இல்லை.
என்னை மன்னிக்க வேண்டும்.
ஏனெனில் நான் இது வரை செய்யாத
காரியங்கள் செய்து பார்த்தேன்.
என் வாழக்கை அழிந்து போகுமுன்னே
நான் திருந்திட வேண்டும்.
அதற்கு ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால்
இப்போதே அது எனக்கு வேண்டும்.
நான் இவ் வுலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்.
நானே அறியவில்லை.
என் சிந்தனைகளும் தெளிவில்லை.
ஆதலால் எனக்கு பாதை விளங்கவில்லை.
அழிவா? ஆக்கமா?
தீமையா? நன்மையா?
சரியா? பிழையா?
விளங்கவி்ல்லை எனக்கு
ஏனெனில் என் நிலைமை இப்போது..

புரியாத புதிராக
வருகின்றது சோதனைகள்
மேற்கொள்ளவும் முடியும்
அடிபணியவும் முடியும்.
ஆனால் எண்ணங்கள்
என்றும் துணிவை தந்ததில்லை.

ஆனால் அழிவதற்கு முன்னால்
திருந்திட சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும்

Sunday, April 20, 2008

அழிந்து போகும் உடலின் மேலே

உயிர் இருக்கும் .. காலம் வரைக்கும் ..
உம்மை நம்பும் .. உள்ளம் தாரும் ..

ஏன் என்றால் அது என் வாஞ்சை...

உம் அருகில் நான் .. இருக்க வேண்டும் ..
உம் பாதம் நான் .. பற்றிட வேண்டும் ..

எதற்கென்றால் அது என் ஆசை

உம் அன்பை .. நான் காண்பதற்கு ..
உம் இரக்கத்தை .. நான் பெறுவதற்கு ..

காத்திருப்பேன் தினமுமே
அதுவே என் மன பாரமே... ..

Monday, April 7, 2008

சமாதான உருவாக்கம் விலைவாசி உருவாக்கம்

சமாதானமாய் வாழும் எண்ணங்களை களைந்து விட்டு அம்மணமாய் சண்டைபோட துடியாய் துடிக்கும் மனித சமுதாயமே...
உன் இருப்பும் வாழ்க்கையும் ஆவியாய் மாறிடும்...

ஆக்ரோசமாக யுத்தத்தினை ஆதரித்து அதனை வளர்க்கும் உந்து சக்திகளாக மாறிவிட்ட பின்னர் எங்கு சமாதானம் என்று கேட்க வேண்டிய காலமாய் உள்ள நாட்களை எண்ணி பார்க்கும் போது லப் டப் என அடிக்கும் இருதயம் கழன்று விட்டாலும் பரவாயில்லை போலிருக்கிறது.

சுதந்திரமும் சமாதானமும் கண்ணுக்கெட்டாத தூரத்தில்
நின்று அசைவாடிக் கொண்டிருக்கும் போது...
அதைப்பற்றி பேசும் துணிச்சல் கொண்ட உள்ளங்களிலிருந்து
மாறிவிட்ட எண்ண அலைகள்...
என்று நிஜத்தை காணும் என எண்ணி பார்க்கிறேன்.

சுகமும் சாந்தியும் பெற்றுக் கொள்ள துடியாய் துடித்த போது...
செய்ய முடியாதவையும் சாத்தியமாய் தெரிந்தது
பெற்றுக் கொண்ட சாந்தியும் சமாதானமும் சுகமும்
இன்று இவ்வுலகிலும் இல்லாமல் ஓடி விட்டன.

பணமும் செல்வமும் குவிந்த போது அதை மேலும்
பெரிதாக்க நினைத்த போது...
எதிர்காலத்தில் அது மட்டும் இல்லையென்று
கூறிச் சொன்ன வேளைதான் பின்னர்
விலைவாசி ஏறிச் செல்லும் போதுதான்
தெரிந்தது

விலைவாசியும் சமாதானமும் சகோதரர்கள் என்று...

Monday, March 31, 2008

எங்கே கிடைக்கும் நிம்மதி

அளவற்ற நன்மைகள் செய்தவர்
அவர் புகழ் பாட
என் நாவுகள் பரிசுத்தமானதல்ல

எண்ணில்லா உதவிகள் செய்தவர்
அவர் உதவியை பெற்றிட
என் கைகள் தூய்மையானவையல்ல

ஆனால் அவர் காட்டிய வழியில்
செல்வதற்கு என் கால்கள்
சுத்தப்படுத்தப்பட வேண்டும்

அவர் செய்தவற்றை நினைத்திட
என் உள்ளம்
திறந்திட வேண்டும்

ஆகவே தான் காலையும்
மாலையும் உம் புகழ்
கூறுகின்ற இயற்கையை
வர்ணிக்க விரும்புகின்றேன்.

எனக்கு சொல்லித் தாரும்
நான் நடக்க வேண்டிய வழியை

ஏனெனில் இறைவனே
நான் இறுதியில் சந்திப்பது
உம்மை மட்டும் தானே

Thursday, March 20, 2008

உலகிற்கு இறுதியாக வந்த இறைவனின் மகன் மூலமாகவே உலகிற்கு இரட்சிப்பு கிடைக்கிறது

உலகிற்கு எத்தனையோ இறை தூதர்கள், நபிமார்கள் அனுப்பப்பட்டு வந்த போதிலும் அவர்களை இறுதி வரை உலகம் அங்கீகரிக்கவி்ல்லை. அதனால் தான் இறைவன் மனிதனாக வரவேண்டி இருந்தது.

இறைவன் மனிதனாக வந்த பின்னர் மீண்டும் இன்னொரு தூதரை அனுப்ப வேண்டிய கட்டாயம் இறைவனுக்கு இல்லை. இறைவன் எவ்வாறு மனிதனாக வருவார் என்பதை எடுத்துக்காட்டும் நூலே யூதர்களின் நூல். அதுவே கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு.

இறைவன் மனிதனாக வரப்போகின்றார் என்பதை எடுத்துக் காட்டிய பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அதன் நிறைவேறுதலை புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தியது. அவ்வாறான வெளிப்படுத்தலோடு அந்த இறைவனின் உயிர்ப்பை இன்றும் நினைவு படுத்தும் புதிய ஏற்பாடு, மீண்டும் அவர் இறைவனாக சர்வ வல்லமையோடு வருவார் என தீர்க்கதரிசனமாக அறிவித்துள்ளது.

இறைவன் இவ்வாறு பாவிகளுக்காக மரித்து உயிர்த்த பின் மீண்டும் தமது தூதரை அனுப்புவார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாக உள்ளது. அதனையே வேதாகமமும் வெளிப்படுத்துகின்றது.

இறைவன் மீண்டும் உலகிற்கு வரப்போவது பாவிகளை தண்டிக்கவே, அவர் வருவதை அவரை சிலுவையில் அறைந்தவர்கள் காண்பார்கள். அவரை கொடுமைபடுத்தியவர்கள் காண்பார்கள். அதுபோல் உலகில் பாவம் செய்து அதில் மூழ்கி இருப்பவர்களும் அவரை காண்பார்கள். ஆனால் அந்தோ பரிதாபம். அவர்களது பாவங்கள் அவர்களுக்கு இனி மன்னிக்கப்படாது. அதுவே புதிய ஏற்பாடு கூறும் உண்மையாக உள்ளது.

இறுதியாக அனுப்பப்படுபவர் இவர் தான் என இஸ்ரயேலர்களுக்கு நீண்ட காலமாகவே அறிவிக்கப்பட்டு வந்த இறைவனின் மகன் அதற்கான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் முற்றுமாக அவரில் நிறைவேறிய போதிலும் மோலோட்டமாக விளங்கியிருந்த யூதர்களுக்கு அவரது எளிமை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில் அரசராக அரச குடும்பத்தில் வருபவராக சித்திரிக்கப்பட்ட இயேசு அரச குடும்ப வம்ச வழியாக பிறந்த போதிலும் எளிமையான வாழ்க்கை காரணமாகவும் அரச ஆசை கொள்ளாதவராக இருந்ததாலும் யூதர்கள் அவரை ஏற்க வில்லை.

யூதருக்கு வெற்றியையும் சமாதானத்தையும் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவராக வருவார் என நம்பியிருந்த யூதர்களுக்கு அவர் கூறிய வார்த்தைகள் விளங்கவில்லை. அவரின் வார்த்தைகளுக்காகவே அவர்கள் அவரை வெறுக்கும் நிலையாக இருந்தது. காரணம் யூதர்களின் மறைமுக பாவங்களை அவர் அதிகாரமுள்ளவராக சுட்டிக்காட்டியதே. யூதர்களின் தவறான காரியங்களை வெளிப்படையாக சுட்டி காட்டினதால் அவர்கள் அவரை வெறுத்தார்கள்.

இன்றும் உலகியலில் உள்ளவர்கள் தங்கள் பாவங்களை சுட்டிக்காட்டும் கிறிஸ்துவிடம் திரும்பாததிற்கு காரணம் அவர்களின் பாவங்களே. தங்கள் பாவத்தை விட முடியாதவர்கள் கிறிஸ்துவிடம் வரமுடியாது. அவ்வாறு கிறிஸ்துவிடம் வராதவர்கள் கிறிஸ்துவின் 2வது வருகையில் கைவிடப்படுவார்கள். 2வது வருகையில் கைவிடப்படுபவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு என்பதை புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகின்றது. அதுவே நித்திய நரகம். எரிகிற அக்கினியில் தள்ளப்படுவார்கள். அங்கு இறுதியில் சாத்தானும் தள்ளப்பட்டு சாகமுடியாத அக்கினியிலே எரிக்கப்படும் நிலை.

புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நடைபெறப் போகும் சம்பவங்களை நம்ப முடியாவிட்டால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை எடுத்து வாசியுங்கள். அதில் என்றோ கூறப்பட்ட தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவின் காலத்தில் புதிய ஏற்பாடாக நிறைவேறின. பின்னர் புதிய ஏற்பாட்டில் கூறப்படும் தீர்க்கதரிசனங்கள் இனி வரப்போகும் காலத்தில் நிறைவேறப் போகின்றன. அவை நிறைவேறும் முன்னர் கிறிஸ்துவிடம் அடைக்கலம் பெற்றிடுங்கள்


Wednesday, February 20, 2008

Friday, February 15, 2008

மிக நீண்ட தூர பயணம்

"நீ செல்ல வேண்டிய பாதை வெகு தூரம்"

பாதை முடிவடைவதில்லை. ஆயினும் பாதைகள் சிறிதாகத்தான் தெரிகின்றன. பாதையில் ஆரம்பம் முடிவு என்று சிலவேளை காட்டலாம். ஆயினும் வாழ்க்கை பாதையை ஆராயும் போது அதன் ஆரம்பம் எங்கு என்றும் முடிவு எங்கு என்றும் ஆராய முடியாது என்பதே உண்மை.

எனது பாதை மிக தூரமுள்ளதாய் இருக்கலாம். அல்லது மிகவும் குறுகியதாயும் இருக்கலாம். ஆயினும் எனது வாழ்வின் இறுதி நிலை பற்றி ஏற்கனவே அறிந்து கொண்டு இருப்பதால் எந்த பயமும் ஏற்பட போவதில்லை. மொத்தத்தில் வாழ்வின் அஸ்திபாரம் எங்கு உள்ளது என்பது அவசியம் ஆராயப்பட வேண்டியது. என்றாலும் அறியாமை எனும் இருள் மறைக்கின்ற உள்ளங்கள் ஒரு போதும் எதிர்காலத்தை அறிய முடியாது.

எனக்கு ஏற்படுத்தப்பட்ட பாதையில் நான் செல்கின்ற போது அதன் முடிவு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் எனக்கு எனது பாதை சிறப்பாக ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நான் அதைக் குறித்து கலங்க வேண்டியதில்லை.
ஏனெனில் எனது பாதை ஏற்கனவே வரையப்பட்டுள்ளது. அப்பாதை முழுமையாக எனக்கு தெரியாத போதும் அதன் தற்போதைய நிலைமை மாத்திரம் நான் அறியக்கூடியது தெரிகிறது.
இந்த சிறிய இடைவெளி சரியான விதத்தில் நிரப்பப்படுகின்றதா என ஆராய வேண்டியது தனிப்பட்ட விதத்தில் ஆராயப்பட வேண்டியது அவசியம். ஆக நேரான பாதை என்பது எங்களது பாதையாக வேண்டும் என்பதே என் கருத்து

Friday, February 1, 2008

சோதனைகளும் வேதனைகளும் புடமிடும் வாழ்வினில்

எவரும் வேதனைகளை அனுபவிக்கின்ற சோதனையான காலகட்டம் என்ற வாழ்க்கை வட்டத்தை பலமுறை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டி நேரிடுகின்றது. இந்த முறைமையை மாற்றியமைக்க முயற்சிக்க முடியாது என்ற உண்மையை மனிதனால் அறிவதற்கும் வேண்டி நேரிடுகின்றது.

இன்பமும் துன்பமும் கலந்ததாக வாழ்க்கையை அமைத்தவன் இறைவன். ஆக வாழ்க்கை இன்பத்தினையும் துன்பத்தினையும் அனுபவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. இன்பங்களிலும் துன்பங்களிலும் வாழ்க்கை பாதை அமைக்கப்பட்டுள்ளது எனும் உண்மை எந்த மனிதனும் அறிந்துள்ள விடயமாக உள்ளபோதிலும் அதன் நடைமுறையை சற்றும் விரும்பாதவனும் அவனாகவே காணப்படுகின்றான்.


ஆக உலகியல் வாழ்வானது எந்த நடைமுறையில் அமையவுள்ளது என தீர்மானிக்கும் எந்த வித சக்தியும் அற்ற ஓர் எண்ணக்கருவாக உள்ள நிலையை மனித சமுதாயம் கொண்டுள்ளதா என சந்தேக நிலை உள்ள போதிலும் வாழ்வியல் ஆதாரங்களை எடுத்து நோக்குகின்ற போது மனித சமுதாயம் தன்னை இனங்காட்டிக் கொள்வது எந்நிலையை?

மனித சமுதாய விருத்தி எத்தகைய பாதிப்பினை ஏனைய சமூகங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது

Tuesday, January 22, 2008

புதிய சந்தர்ப்பம் தருவது வேதாகமமே

கர்த்தரின் வசனங்கள் உண்மையுள்ளது http://www.karththar.blogspot.com/ என்றும் விடுதலை

புதிய சந்தர்ப்பம் தருவது வேதாகமமே

சாகும் மனிதனுக்கு மீண்டும் வாழ்வு வேண்டுமா?

பிரச்சினை உள்ள மனிதருக்கு பிரச்சினையிலிருந்து மீள வேண்டுமா?

பாவக்கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டுமா?

மந்திர தந்திர, பில்லி சூனிய, பேய் பிசாசுகளிலிருந்து விடுதலை வேண்டுமா?

வெற்றியை தேடுகிறீர்களா?


இவற்றிற்கு பதிலை நீங்கள் எதிர்பாருங்கள் பரிசுத்த வேதாகமத்தில். வேதாகமத்தை வாசித்து பாருங்கள். அங்கு பிசாசுகளுக்கு நடந்த காரியங்களை,

ஆக உங்களுக்கு விடுதலையை தரக்ககூடிய வழி காட்டுகின்றது பரிசுத்த வேதாகமம். ஆகவே இன்னும் ஏன் தாமதம் வேதாகமத்தை வாசியுங்கள். நான் சொல்லவில்லை வேதாகமத்தை நீங்கள் வாசிக்காவிட்டால் நீங்கள் வெற்றியடைய முடியாது என்று. ஆனால் வேதாகமம் தேவனுடைய வார்த்தையானதால் அந்த வார்த்தை தேவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. அது பாவியை பாவி என உணர்த்தும். பாவ வாழ்விலிருந்து விடுபட உதவும்.

பாவத்தில் வாழ்வோருக்கே வேதாகமம் ஒரு பாவற்காய். தம்மால் உண்மையை உணர முடியாதவர்களுக்கே வேதாகமம் ஒரு பொய்யான புத்தகம். தமது பாவத்தையும் அசுத்தத்தையும் விட முடியாதவர்களுக்கே வேதாகமம் எரிச்சலை தரும். பிசாசோடும் அவன் காரியங்களோடும் இணைந்திருப்பவர்களுக்கே வேதாகமம் ஒரு எதிர்ப்பு சக்தி.ஆக வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றது என கூறும் போது வேதாகமத்தை வாசித்து பாருங்கள். அங்கே நீங்கள் முத்துக்களை கண்டடைவீர்கள். உங்கள் வாழ்வை நலமாக்கிடுவீர்கள்.

யாவருக்கும் ஒரு வேதாகமம் கொடுப்பது நல்லது. வேதாகமத்தை வைத்திருப்பது எல்லோராலும் செய்யக்கூடியது.

எந்த மதத்தினராயினும் அவர்களுக்கு உதவக்கூடிய ஒன்றாக காணப்படுவது கிறிஸ்தவ வேதாகமமாகும். உண்மையில் எல்லா மதத்தினையும் மதிக்கின்றவர்களுக்கு இது உண்மையில் கடினமானதல்ல. காரணம் வேதாகமமானது எல்லாவித மந்திர வாத சக்திகளுக்கும் அப்பாற் பட்ட ஒன்று. அதே வேளையில் எவ்வித தீய தாக்கத்தையும் எந்த ஒரு நபருக்கும் ஏற்படுத்தாது என்பேனாகில் அது சரியானதே.

காரணம் எல்லாவித சக்திகளுக்கும் மேம்பட்டது இந்த வேதாகமம். இதில் தேவனுடைய வார்த்தைகள் உள்ளன. இந்த தேவன் மனிதன் மேல் வைத்த அன்பினால் இவ்விதமாக தமது வார்த்தைகளை மனிதனுக்கு கூறினார். முற்றுமாக நடந்து முடிந்தவற்றை மாத்திரம் இந்த வேதாகமத்தில் கூறிடவில்லை. மாறாக இனி நடக்கப்போகின்றவைகளையும் கூறியுள்ளார்.


சாதாரணமாக மனிதன் நினைப்பது எல்லா மதங்களையும் போலவே கிறிஸ்தவமும் சாதாரணமாக மனிதன் உருவாக்கி வைத்து அதன் வழிவந்த ஒரு் மதம் என்பதைப் போலவே. ஆனால் அதுவல்ல. வல்ல தேவன் தமது வார்த்தைகளை மனிதனுக்கு நேருக்கு நேராக வெளிப்படுத்தி அவனோடு நெருங்கிய உறவால் அவனை வழிநடத்தி வந்துள்ளார். இன்னும் கூட தேவனைத் தேடி அவரது கட்டளைக்கு கீழ்ப்படிவோருக்கு அவர் தமது கட்டளைகளை நேரடியாகவோ அல்லது ஏற்கனவே கூறப்பட்ட அவரது இந்த வேதாகமத்தின் மூலமாய் ஒரு வசனத்தினூடாகவோ வெளிப்படுத்துகின்றார்.


வேதாகமத்தில் அவரரது வார்த்தைகள் இன்றும் மனிதனுக்கு பேசத்தக்க ஜீவனுள்ள வார்த்தைகள். அது மனிதனின் உள்ளத்தை கிழிக்கக்ககூடிய இரு புறமும் கருக்குள்ள ஜீவ வார்த்தைகள். அவரது உன்னதத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள். அவரது அநாதி சிநேகத்தையும் அவரது பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளை கொண்ட புத்தகம். ஒரு போதும் அவரது இந்த வார்த்தைகள் நிலைபெயராது. அழிந்து போகாது.


உண்மையிலேயே இந்த செந்தமிழில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தமிழ் உள்ளங்களுக்கு உன்னத வாய்ப்பாகும். பண்டைய தமிழில் வேதாகமம் காணப்படுவது எவ்வளது நல்லதொரு சந்தர்ப்பம். தூய தமிழ் மொழியிலும் வேதாகமம் கிடைத்திருப்பது எத்தனை ஆச்சரியமான காரியம். ஆகவே வேதாகமமானது தமிழில் உள்ளதால் தமிழர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். ஏறக்குறைய 2000 மொழிகளுக்கு அதிகமாக வேதாகமம் காணப்படுகின்றது. அதில் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


இதை செய்வதற்கும் இந்த தமிழ் மொழியிலும் வேதாகமத்தை கொண்டுவருவதற்கு தேவன் உதவி செய்திருக்கிறார் என்றால் தேவன் தமிழர்களையும் நேசிக்கிறார் என்று தமிழர்களால் உணர்ந்து கொள்ள முடியாதோ?

Saturday, January 19, 2008

கடந்த சில நாட்கள்

கடந்த சில நாட்களாக எனக்கு ஒரு வித பயம் ஏற்பட காரணமாகியது, ஏனெனில் நான் இலங்கையில் இருக்கின்றேன். இலங்கையின் நிலைமை இப்போது முழு உலகிற்கும் தெரியும். அந்த வகையில் இலங்கையில் நாட்களை கடத்துவது என்பது எந்த வகையில் நல்லதாக அமையப்போகின்றது என்ற பயம் உண்மையில் அனேகருக்கும் கேள்விக்குறியாகியுள்ளது.

முக்கியமாக சிறு பான்மையினரோ பெரும்பான்மையினரோ யாவரும் மனிதரே. குறிப்பாக ஆசிய இனங்கள் அடிபடுகின்ற காட்சி உண்மையிலேயே வேதனையை தான் ஏற்படுத்துகின்றது. எந்த ஆசிய நாட்டவன் எழுந்து நிற்க வேண்டுமே அவன் இன்னொருவனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றான்.

வேறு ஒரு நாட்டவனோடு யுத்தம் செய்தவன் தற்போது தானே தனக்குள் அடிபாடுகள். இது உண்மையிலேயே ஒரு சாபம் தான். இந்த சாபம் உள்வீட்டுக்குள்ளேயே நெருப்பை பற்ற வைக்கின்றது. உள்வீடே இந்த அல்லோல கல்லோலம். இதற்கு எல்லாம் காரணம் என்ன? காரியம் ஏன் இவ்வாறு போகின்றது? இது உண்மையில் இந்த உலக நாடுகள் கேட்க வேண்டிய கேள்வி.

ஆசிய நாட்டவர்களில் ஜப்பானியர்களின் கண்டு பிடிப்புக்களோடு இலங்கையின் நிலைமை என்ன?

ஆசிய நாட்டவர்களில் சிங்கப்பூரியர்களின் பொருளாதார வளர்ச்சியோடு இலங்கையின் நிலைமை என்ன?

ஆசிய நாட்டவர்களில் இந்தியர்களின் நாட்டுப் பற்றோடு இலங்கையின் நிலைமை என்ன?

எல்லாவற்றிலும் இலங்கை வீழ்ச்சியை காட்டுகின்றதா? இது சிந்திக்க வேண்டியது அவசியம்?

Thursday, November 29, 2007

மனித அறிவால் இறைவனை அறியலாமா?

இறைவனை மனிதன் எதனால் அறிந்து கொள்ளமுடியும்?

அவன் ஒரு போதும் முழுமையாக

இறைவனை அறிய அவனது

இந்த சிறிய அறிவு எம்மாத்திரம்.

ஆகவே தான் என்னற்ற கடவுளர்களும்

இந்த மனிதனுக்கு திருப்தியாகவில்லை.


உண்மையிலேயே இறைவனை காண

அறிவு தேவையில்லை.

ஏனெனில் இறைவனே மனிதனுக்கு

குறிப்பிட்ட ஞானத்தை வரையறுத்து விட்டான்.


வரையறை தாண்டி மனிதன் சிந்தித்தால்

அவன் செல்லும் பாதை பிழையாகிவிடும்


மனிதன் வீணாய் சிந்தித்து

பிழையான பாதையில் செல்லாதிருக்கவே

இறைவன் தன்னை வெறுத்து உலகிற்கு

மனிதனாக வரவேண்டியிருந்தது.


இறைவன் மனிதனான வந்தபோதும்

மனிதன் ஏனோ விரும்பவில்லை

இன்னும் மனிதனுக்கு உண்மையை

அறிவதில் எண்ணமில்லை.


ஆக மனிதன் மரணத்தின் பின்

நடக்கப் போவதை அறியாததால்

இன்னும் அறியாமையிலிருக்கிறான்


மனித மரணத்தின் பின் அவனுக்கு

என்ன கிடைக்கப்போகின்றது என

அவன் அறிந்திருந்தால் அவனது

நிலைமை மாறியிருந்திருக்கும்


ஆனால் உண்மையை விட்டு விட்டு

மாயையை மனிதன் பின்பற்றுவதால்

அவனுக்கு கிடைக்கவுள்ள பாக்கியங்களை

அவனாகவே நழுவ விடுகின்றான்.


ஆனால் இறைவனை பற்றி அவனது

சிந்தனைகள் மட்டுப்படுத்தப்பட்ட எல்லையாக

உள்ளவரை அவன் அறிவால் இறைவனை

அறிய முடியாது


முழுமையாக இறைவனால் நடாத்தப்படும்

போதிலேயே அவன் இறைவனை அறிந்து

கொள்ள ஏதுவாகும்.


ஆக உயிருள்ள தேவன் தன்னை மனிதனுக்கு

வெளிப்படுத்தினார். இன்றும் வெளிப்படுத்துவதோடு

மனிதனை சுகப்படுத்துகின்றார்.


அவரையன்றி வேறு மார்க்கம் இல்லை.

உயிருள்ளவர் அவர் இயேசுவேThursday, November 22, 2007

LBC யில் எனது வாழ்க்கை - 02

இவ்வாழ்க்கையிலே பல நண்பர்கள்

எனக்கு கிடைத்தனர். பல சந்தர்ப்பங்கள்

என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கின.


ஆரம்ப நாட்களில் கடினமாக இருந்தவை

சிறிது காலங்களின் பின்னர் மிகவும்

இலகுவான விடயங்களாக மாறியது

எனக்கு மகிழ்ச்சியாகியது.


பல்வேறு விடயங்கள் புதுமையாக

வித்தியாசமான அனுபவங்களாக இருந்தது.

ஆரம்பம் அபூர்வமாய் அமைந்திருந்தது.


இவ்வாறாக நாட்களிலும் ஒரு வித கலக்கம்

எனக்குள் இருந்ததை மறுக்க முடியாது.

ஏனெனில் இவ்வாறாக சந்தர்ப்பம் இதுவே

முதல் முறையாக எனக்கு அமைந்திருந்தது.


எல்லாம் புதுமையாக இருந்தாலும்

சில சம்பவங்கள் எனக்கு சலிப்பை ஏற்படுத்தின

சிலரது வித்தியாசமான எண்ணங்களுக்கு

என்னை ஈடுபடுத்த சிரமமானது.


வாழ்வின் பல சம்பவங்கள் மனதில்

நிற்குமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய போதும்

இக் கல்லூரியில் வாழ்வில் ஏற்பட்ட

தாக்கங்களும் அடங்கும்.


அதிகமாக கல்லூரி நாட்களில் கிடைக்கும்

வேலை நேரங்களில் பலமுறை நான்

கணனியோடு அமர்ந்திருந்தது அதிகம்

என்றால் அது மிகையில்லை.


நூலகத்தில் எனது ஓய்வு நேரங்களை

கழிப்பதில் ஒரு வித புது அனுபவம் நான்

பெற்றேன். அவ்விதமான நேரங்களில் நான்

அதிகமாக சஞ்சிகைகளோடு இருப்பேன்


கல்லூரியின் நூலகத்தின் கீழ்ப்பகுதி ஆங்கில

நூல்கள் கொண்ட பகுதியாகும்.

இக் கீழ்ப்பகுதியிலேயே கணனிப் பகுதியும்

அமைந்து இருக்கின்றது.


மேல் பகுதியில் தமிழ் மற்றும் சிங்கள்

புத்தகங்களும் சஞ்சிகைகளும் உண்டு.

நான் தமிழ் சஞ்சிகைகளை புரட்டிப் பார்த்ததில்

சில சஞ்சிகைகளுக்கு பதில்களும் அனுப்புவதுண்டு


தொடர்பு என்ற பத்திரிகையில் நான்

அனுப்பி வைத்த ஒரு சிறு கவிதை

பிரசுரமானதில் நான் மகிழ்ந்தேன்

அது ஒரு சிறு முயற்சியானது.


இன்னொரு சஞ்சிகைக்கு அனுப்பிய

கவிதையை சிலர் வாசித்து என்னை

இன்னும் வாழ்த்தியதை என்னால்

மறக்க முடியவில்லை


இவ்வாறான கல்லூரி நாட்கள் ஒரு விதத்தில்

இனிமையாக இருந்த போதிலும்

ஏனைய விதமாக ஏனைய நேரங்களில்

காணப்பட்ட சலிப்பும் மறக்க முடியாதது.

Friday, November 2, 2007

LBC யில் எனது வாழ்க்கை - 01

நான் இ.வே.கல்லூரியில் இணைந்தது
எனது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக
ஆரம்பத்தில் டிப்ளொமாவுக்காக 2 வருடங்களை
செலவிட வேண்டும். இது தங்கியிருந்து
கற்க வேண்டிய கால எல்லையாகும்.

நான் 2005 டிசம்பரிலேயே கல்லூரியில்
இணைவதற்கான படிவத்தை பூர்த்தி
செய்து கல்லூரிக்கு அனுப்பினேன்.

கல்லூரியிலிருந்து இணைவதற்கான
உத்தரவும் உடனடியாக வந்தது.
2006 ஆம் ஆண்டு ஜனவரியில்
கல்லூரியில் இணைந்து கொண்டேன்.

கல்லூரியில் ஒருவாராக எனது கல்வி
நடவடிக்கைகளுக்கான பதிவுகள்
நிறைவு பெற்றது. ஒரு மனநிறைவு
எனக்கு ஏற்பட்டது.

கல்வி கற்க வேண்டும் என்ற எனது
நீண்ட நாள் அவா நிறைவேறியது
எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

கல்லூரியின் சட்ட விதிகள் சில
என்னால் புரிந்து கொள்ள முடியாததாய்
விளக்கமற்ற முறையாக எனக்கு
தெரிந்தது.


ஆனாலும் பின்னர் ஒருவாராக

அவற்றுக்கு என்னை ஈடுகொடுக்க

என்னை நான் பழக்கிக் கொண்டேன்

பின்னாளில் இவை இலகுவானதாகவே

இருந்தது.


கல்லூரியின் ஆரம்ப நாட்களில்

கல்வித்திட்டங்கள் சிரமமாக காணப்

பட்ட நேரத்திலும் பாடங்களை விளங்கிக்

கொள்வதில் சிரமங்கள் பெரிதாக

இருக்க வில்லை.


கல்லூரி ஆரம்பத்தில் நடந்த

விளையாட்டு நிகழ்ச்சி என் மனதில்

இன்னும் தெரிகிறது. கயிறு இழுத்தல்

போட்டியில் நானும் சேர்ந்து சகதியில்

விழுந்தது இன்னும்


Thursday, November 1, 2007

சந்திப்பு

மிகவும் சந்தோஷமளிப்பது எம் உறவுகளை

சந்திக்கும் போது தான். அதிலும் அவர்களை நீண்ட

நாட்களின் பின்னர் சந்திக்க கிடைப்பது

உண்மையிலேயே மனதை குஷியாக்கும் ஒரு

விடயம்।


கொரியாவில் சண்டை நடந்த போது கொரியா

வடகொரியா மற்றும் தென் கொரியா என இரண்டாக

பிரிவடைந்தது. அதன் பின்னர் அந்நாட்டினர் தற்போது

இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போது அவர்களின்

கண்களிலிருந்து ஊற்றுண்ட கண்ணீர்கள்

அவர்களின் சொந்தங்களை உருக்கும் அதே அளவுக்கு

எங்கள் கண்களையும் உருக்கும் காட்சிகளாக உள்ளது.


ஆகவே உறவுகள்
உண்மை என்பது வாழ்வில் ஒரு சாதனை

உண்மையாய் வாழ்ந்து காட்டுவது என்பது ஒரு சாதனையாக கருதப்பட வேண்டும்। உண்மையற்றோர் வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறுகின்றார்கள் என்று மற்றவர்கள் கருதலாம்। ஆனாலும் உண்மை அதுவல்ல।


நான் பலமுறை உண்மையைக் கைக்கொள்ள

நினைத்திருக்கின்றேன். சில வேளைகளில் உண்மையை

கைக்கொள்வது முடியாத கட்டங்களும் ஏற்பட்டது

உண்மை தான்.

ஆயினும் உண்மையற்ற காரியங்களை நான் தவிர்த்து

வந்துள்ளதும் உண்மை।

உண்மையாய் வாழும் போது ஏற்படும் சவால்களுக்கும்

நான் முகங் கொடுத்திருக்கின்றேன்।

ஆனால் ஒரு போதும் உண்மையை விட்டுக் கொடுக்க

விரும்பவி்ல்லை।

உண்மையை கைவிட்டு விடவும் விரும்பவில்லை।

உண்மை உண்மையிலேயே கடினம் தான்।

அதை மீறிவிட்டால் அதன் தன்மை மாறிவிடும்।


உண்மை பேசினால் தவறு என ஆம் பட்சத்தில்

Tuesday, October 30, 2007

நிம்மதி

உலகமே

சுருங்கிவிட்ட

நிலையில்


எல்லாம்

கைவந்த

கலையாகி


நினைத்தது

இலகுவாய்

நடக்கிறது


தூர

பயணம்

சிறிதானது


என்

உணர்வுகள்

மட்டும்


ஏனோ

என்னை

வாட்டும்


வருவது

வரட்டும்

என்றால்


எல்லாம்

நிலைமாறி

நடக்கிறது


எண்ணங்கள்

பலவும்

பலவிதம்


மனதும்

பறக்கும்

வேறிடம்


உறவுகள்

தூரமாய்

போயினும்


சங்கமமாக

உதவிட

விஞ்ஞான


கருவிகள்

இருந்த

போதிலும்


ஏனோ

எனக்கு

சங்கடம்


அகிலம்

படைத்த

இறைவனும்