இஸ்ரவேல் மக்களுடைய அக்கிரமங்கள், பாவ சிந்தனைகள் பெருகிய போது தேவன் அவர்களை ஏனைய ஜாதிகளிடத்தில் சிதறடித்தார்.
அவர்கள் ஏனைய ஜாதியினரிடம் சிறைப்பட்டுப் போவதற்கு அவர்களது பாவங்களே காரணமாக அமைந்தன.
சிறைப்பட்டுப் போன யூதர்கள் அந்த ஜாதிகளால் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.
அவர்களது சொத்துக்கள் ஏனைய ஜாதியினரால் பறிக்கப்பட்டன.
“ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்” (லேவியராகமம் 26:19)
யூதர்கள் சிதற அடிக்கப்பட்டது மட்டுமல்ல. அவர்கள் பின்னாக ஜாதிகள் பட்டயத்தை வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு யூதனும் மரித்துப் போவதற்கு தேவனுடைய இந்த எச்சரிப்புக்களை விட்டு அவர்கள் விலகியதே காரணமாக இருக்கின்றது.
அவன் எதனை செய்யக்கூடாததாயிருந்தது. “நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:” (லேவியராகமம் 26:14-15)
1. இஸ்ரவேலர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுக்காமற் போனார்கள்.
2. தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் முழுமையாக செய்ய விரும்பவில்லை.
3. அவர்கள் தேவனுடைய கட்டளைகளை வெறுத்தார்கள்.
4. அவர்கள் நியாயங்களைஅரோசித்தார்கள்.
5. கற்பனைகள் எல்லாவற்றையும் செய்யவில்லை 6. முடிவாக அவரது உடன்படிக்கையை மீறிப்போட்டார்கள்.
இவ்விதமாக செய்யும் போது தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுகின்றது.
இவ்விதமாக தேவனுக்கு விரோதமான காரியங்களின் காரணமாக இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த தேசத்திலிருந்து வேறு தேசங்களுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.
அவர்கள் தங்கள் ஜீவனுள்ள தேவனிடமிருந்து செல்ல வேண்டியதாக இருந்தது.
“நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன். உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள். உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள். துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்” (லேவியராகமம் 26:17)
இவ்விதமான சிறிய தண்டனைகளுக்கும் அவர்கள் செவிகொடுக்காவிட்டால் தேவனால் மேலும் தண்டிக்கப்படுவார்கள்.
“நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,..” (லேவியராகமம் 26:21)
இவ்விதமாக தேவனுடைய கோபம் அவர்கள் மேலாக வரும்.
இவ்வித வாதையை யூதருக்கு வருவதைக் கண்டு அவர்களோடு இருந்தும் தேவனை அறியாத ஏனைய ஜாதிகளுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
பிற ஜாதிகள் பிரமிப்பார்கள். “நான் தேசத்தைப் பாழாக்குவேன். அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்” (லேவியராகமம் 26:32)
இன்னும் பல வாதைகளை தேவன் அவர்களுக்கு செய்வேன் என எச்சரிக்கின்றார்.
இவை பிற தேசங்களில் நடக்கும் போது அவர்களுடைய தேசமான இஸ்ரேல் தேசம் ஓய்வாக இருக்கும்.
அவர்கள் தங்கள் தேசத்திற்கு ஓய்வு கொடுக்காதபடியினால் இப்போது ஓய்வடைந்திருக்கும்.
“நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினால், அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.” (லேவியராகமம் 26:34-35)
இவ்விதமாக தேவனின் கோபத்தினால் அவர்கள் புற தேசங்களில் தங்கியிருப்பதோடு அங்கு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்வர்.
அத் தேசத்தார்கள் அவர்களுக்கு எதிராக காரியங்களை செய்வார்கள். இவ்விதமான காரியம் வேதாகமத்தில் 6,000 ஆயிரம் வருடங்களுக்கும் முன்னராகவே மோசேயினால் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இது மோசேயினுடைய வார்த்தைகள் அல்ல. தேவனால் மோசேயினூடாக அறிவிக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகமத்தில் இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன.
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு இவ்விதமாக அவர்கள் தேவனை மறந்து போனால் இவ்வாறு நடைபெறும் என கூறியிருந்தார்.
பல முறை அவர் தம்முடைய மக்களை எச்சரிக்க பல தீர்க்கர்களை இஸ்ரவேலிலே எழும்பப்பண்ணினார்.
வேதாகமத்தில் வருகின்ற அனைத்து தீர்க்கர்களும் இஸ்ரவேலிலேயே எழும்பியுள்ளனர்.
இஸ்ரவேல் தேசத்திலிருந்து வராத எவரும் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அல்லவென்பது இதன் மூலமாக தெளிவாகும்.
இயேசுக்கிறிஸ்து எனும் தேவனுடைய மாம்ச வெளிப்பாடானது இஸ்ரவேல் தேசத்திலேயே வெளிப்பட்டது.
ஏனெனில் தேவன் தம் கட்டளைகளை மக்களுக்கு கொடுத்து அவர்கள் அதினை கடைபிடிக்க தடுமாறும் போது தேவன் அவர்கள் மேல் இரக்கங் கூற வேண்டியதாக இருந்தது.
ஓரே உயிருள்ள ஜீவனாகிய இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமின் தேவனாக இருந்தார்.
ஆபிரகாமோடு பேசியவர் ஈசாக்கோடு பேசினார். யாக்கோபோடு பேசினார். மோசேயோடு பேசினார். இன்றும் அவர் பேச வல்லராக இருக்கின்றார்.
ஏனெனில் ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய ஒரு ஜாதி இஸ்ரவேல் ஜாதி மட்டுமே. அந்த ஜாதியை ஏற்றுக்கொள்ளும் ஏனைய ஜாதிகளுக்கும் அந்த சந்தர்ப்பம் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இஸ்ரவேல் ஜாதியாரை எந்த ஜாதி ஏற்றுக் கொள்ளுகின்றதோ அந்த ஜாதிகள் அவர்கள் மூலமாக ஆசீர்வாதத்தை பெறுகின்றன.
அன்று ஆபிரகாமுக்கு ஆசீர்வாதத்தை தேவன் கட்டளையிட்டபோது அவனது சந்ததியாருக்கும் அந்த ஆசீர்வாதம் கடந்து வருகின்றது.
ஆபிரகாம் மரித்துப் போனான். அவனது சந்ததிகளும் மரித்துப் போயினர்.
தற்போது ஆபிரகாமின் புதிய சந்ததியினர் ஈசாக்கின் மூலமாக யாக்கோபின் மூலமாக இன்றும் இஸ்ரவேல் தேசத்தில் குடியிருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் தேவனை பின்பற்றியபடியினால் மீண்டும் தங்கள் தேசங்களிற்கு தேவனால் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
அதினால் தான் எந்த ஒரு நாடும் அவர்களுக்கு எதிராக எந்த சூழ்ச்சியையும் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.
1948ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நாடுகள் அவர்களுக்கு எதிராக உள்ளன.
எதிராக உள்ள நாடுகள் இன்று இஸ்ரவேலரின் தேவனுக்கு எதிராகவே உள்ளன.
இஸ்ரவேலரது இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையின் காரணமாக இஸ்ரவேலரை மேற்கொள்ள முடியவில்லை.
இஸ்ரவேலரின் வெற்றியின் இரகசியமானது அவர்களது பெலனல்ல. அமெரிக்காவின் உதவிகள் அல்ல.
மாறாக அவர்களது ஜீவனுள்ள தேவனின் மேலான அவர்களது நம்பிக்கையே.
உலக நாடுகள் கைவிடலாம். அமெரிக்கா கைவிடலாம். ரஷ்யா தனது படைகளை எதிர்காலத்தில் இஸ்ரவேலில் கொண்டு வந்து நிறுத்தலாம்.
ஆனால் ஜீவனுள்ள தேவனின் பலத்த கரம் அவர்களோடு இருந்தால்… ஜீவனின் அதிபதியான உலகத்தின் மீட்பராம் இயேசுக்கிறிஸ்துவின் பிதாவான பரலோக தேவனுக்கு முன்பாக இஸ்ரவேல் எனும் தேசம் ஒரு போதும் எந்த எதிரிகளின் மூலமாகவோ அசைக்கப்படாது.
தேவனுடைய பலத்த கரமே இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்யும். இஸ்ரவேலர் எழும்பும் முன்னரே தேவனாகிய கர்த்தர் அவர்களுக்காக அவர்களது எதிரிகளை முறியடிப்பார்.
உலகமோ அல்லது சாத்தானோ இஸ்ரவேலை ஒன்றும் செய்ய முடியாது. உலகத்திலுள்ளவர்களை விட எங்கள் தேவன் பெரியவர் என்று இஸ்ரேல் சொல்லுகிறது.
“தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ.
அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.
உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்.
அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்”.
(உபாகமம் 4:32-40)
No one has commented yet. Be the first!