கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகிறார்கள்
மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அதற்குரிய வரியை அரசாங்கத்துக்கு செலுத்தி இருக்க வேண்டும். வருமான வரி என்பது கட்டாயம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செலுத்த வேண்டிய தொகை. இது யாராக இருந்தாலும் அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
‘இயேசு அழைக்கிறார்’ சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
முறையாக வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை உள்பட வீடு உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
சோதனையிலேயே பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் பணி செய்து வருகிறார் பால் தினகரன்.
சென்னை அடையாறிலுள்ள `இயேசு அழைக்கிறார்’ மிஷனரியின் தலைமை அலுவலகம், சென்னை பாரிஸிலுள்ள அலுவலகம், பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள், கோயம்புத்தூரிலுள்ள பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, தமிழகம் முழுவதும் `இயேசு அழைக்கிறார்’ மிஷனரிக்குச் சொந்தமான கட்டடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இரண்டு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. `இயேசு அழைக்கிறார்’ மிஷனரி, மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனால் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மதபோதகர் பால் தினகரன், அவரது குடும்பத்தினரால் அந்த மிஷனரி நிர்வகிக்கப்பட்டுவருகிறது.
அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மத பிரசங்கங்களைத் தமிழகம் முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், `இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த தவறான முடிவு கண்டிக்கப்பட வேண்டியது
No one has commented yet. Be the first!