காரணம் என்ன?
கண்களுக்கு மறைவான நோய்த் தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது.
நன்றாக இருந்தவர்கள் மரித்துப் போகிறார்கள்.
நேற்று இருந்தவர்களில் பலர் இன்று இல்லை.
ஆகவே மனிதர் சமூக இடைவெளி பேண அறிவுறுத்தப்படுகின்றனர்,
அதனால் கிடைக்கும் நன்மை என்ன?
இயலுமான அளவு நோய் தொற்று அணுகாது,
பரவும் தன்மை குறையும் என்பதினால் சமூக இடைவெளி பேண மக்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்படுகின்றது.
உண்மையிலேயே மனிதர் குறித்த துாரம் ஒருவருக்கொருவர் தள்ளி நின்று செயற்பட வேண்டியதாகி விட்டது.
உற்ற நண்பர்கள் கூட சேர்ந்து இருக்க முடியாதென உலகம் சட்டம் போட்டு விட்டது.
ஆனாலும் மனிதருக்குத்தான் இச்சட்டம்.
இறைவனோடு அல்ல.
இறைவனிடம் கிட்டிச் சேர வேண்டும்,
ஒருபோதும் இறைவனின் பாதத்திலிருந்து இடைவெளி விட்டுச் செல்ல வேண்டாம்.
ஏதோ ஒரு திட்டத்துடன் அனுமதியுடன் தான் கொரனாவின் கால எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
இறைவனுடன் இணைந்து வாழ்வோம்.
உலகை படைத்த இறைவனை போற்றுவோம்.
இறைவன் பாதம் சேருவாேம்.
மனிதருடன் சமூக இடைவெளி பேணுவோம். இறைவனுடன் அல்ல.
No one has commented yet. Be the first!