அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.
உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாக கிறிஸ்துவின் இராஜரீகமான வருகை அமையவுள்ளது. இயேசுவை எதிர்த்தோர் அவரை காணப்போகின்றார்கள். இயேசுகிறிஸ்துவை ஏசியவர்கள், எதிர்த்தவர்கள், அவமதித்தவர்கள் அவரைக் காணப்போகின்றார்கள்.
அப்போது அவர்களின் நிலை என்ன? மத்தேயு 25:31ல் கூறப்படும் இக்காரியம் எதைப்பற்றி கூறுகின்றது. உலகிற்கு இறைவன் மனித சாயலாக மனிதன் காணும் வண்ணமாகவே வந்ததால் அவரது வெளிப்பாடு இங்கு மனுஷகுமாரன் எனப்படுகின்றது.
இயேசுக்கிறிஸ்துவே இவ்வுலகின் படைப்பாளராவார். அவர் பாவிகளின் கைகளினால் மரணத்தை தழுவினார். ஆனாலும் அவர் இறைவன் என்பதினால் மரணத்திலிருந்து ஜெயம்கொண்டவராக மனுஷகுமாரன் உயிரோடு எழும்பினார்.
மரணம் மனிதர்களை மாத்திரமே மரணிக்க வைக்கலாம். இறைவனால் மனிதனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட மரணத்தை இறைவன் மனிதன் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக மனிதனாக வந்து மரணத்தை எதிர்கொண்டு வெற்றி சிறந்து காட்டினார்.
இது இயேசுவை கொலைசெய்த மனிதர்களுக்கு கிட்டிய வெற்றியல்ல. மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கத்தக்கவர் தான் என்பதை காட்டிக்கொடுத்த கிறிஸ்துவின் வெற்றியே ஆகும்.
இவ்வாறு மரணத்தை வெற்றிகொண்ட இறைவனை விசுவாசிப்பதன் மூலமாக நாமும் மரணத்தை வெற்றிக்கொள்ள முடியும். புதிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பமே இங்கு தரப்படுவதற்காகவே உள்ளது.
கிறிஸ்து உலகிற்கு வரப்போகும் நாள் மிகவும் தொலைவிலில்லை. அது மிகவும் அருகிலிருக்கின்றது. அந்நாளை யாரும் அறியார். சிலவேளைகளில் இதை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவோ கூட இடம்பெற்றிருக்கலாம்.
அவரது வருகை பரிசுத்த தூதரோடுங்கூட இருக்கும் என வேதாகமம் கூறுகின்றது. அவர் சீக்கிரம் வரப்போகின்றார் என ஏற்கனவே வேதாகமம் எச்சரிக்கின்றது. இவ்வித தீர்க்கதரிசனங்களைக் கொண்ட புத்தகமாக இன்று இந்த உலகில் வேதாகமம் மட்டுமே உள்ளது.
கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. அவருடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் சிலுவையில் அறையப்பட்ட கிறஸ்து இப்போது இராஜாவாக வீற்றிருக்கின்றார்.
இப்போது அவரை பற்றி நோக்குங்கள். அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அவர் முன் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். கிறிஸ்துவின் உயிர்ப்பை விசுவாசியாதவர்கள் அவர் முன் மௌனிகளாக இருக்க வேண்டி ஏற்படும்.
இயேசுவை அறிந்தும் அவரது செய்தியை தள்ளிய நீங்களும் அவருக்கு முன் என்ன செய்யப் போகின்றீர்கள்? அவர் இனி இராஜாவாக வாரப்போகின்றார்.
எப்போது அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரோ அப்போதிருந்தே அவர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து இந்த உலகை நோக்கிக்கொண்டிருக்கின்றார்.
இன்றைய நாட்களில் நாம் அவரது செயற்பாடுகளை அறிந்து கொள்கின்றோம்.
எவ்வாறு? கிறிஸ்து இன்றும் சபைகளில் தம்முடைய மக்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார்.
ஏன்? இன்னும் மக்கள் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டாலும் அவரை ஏற்க விரும்பவில்லை.
வெறுமனே அற்புதங்களை மாத்திரம் நிகழ்த்தி தமது மாபெரும் மேன்மையை நீரூபிக்க வேண்டிய தேவை கொண்டவரல்ல சிங்காசனத்திலிருக்கும் இறைவன். அவரால் இந்த உலகை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறு அழிக்கவும் முடியும்.
ஆயினும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றார். அவர் சீக்கிரமாய் வரப்போகின்றார்.
அவரது வருகை இப்போதும் நிகழலாம். செய்யவேண்டியது ஒன்றே அவரை விசுவாசிப்பது மாத்திரமே.
உங்களை ஆளுகிறவர்களை விட வல்லமையுள்ளவர் வரும்போது எவ்வாறு அவர்களுக்கு ஆதரவளிப்பீர்களோ அவ்வாறு இந்த இறைமகனுக்கு ஆதரவளியுங்கள்.
அப்போது உங்கள் மரணத்தின் பின்னதான வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்துவோடு பரலோகில் உங்கள் நித்திய வாழ்க்கையை களிக்க முடியும்.
No one has commented yet. Be the first!