உலகம் இன்று மிகவும் போராடி வருகின்றது.
ஏன்?
எதற்காக?
உலகின் பயங்கர கொலையாளியாக மாறியிருக்கும் கொரனா என்னும் கொடிய அரக்கனை கண்டு பயந்து இருக்கிறது.
உலகில் கொலையாளியாக மக்களைத் தினம் தினம் வாட்டி வதைக்கிறது இந்த எதிரி.
ஒளிந்திருந்து காரியத்தை கச்சிதமாக முடிக்கிறது.
எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காதவரும் எதிர்காலத்தை நினைத்து வருந்துகிற
அவல நிலைக்குள் நம்மை தள்ளி இருக்கிறது.
அரக்கனை அழிக்கும் வண்ணமாக உலகில் விஞ்ஞானிகள் போராடி வருகின்றார்கள்.
உலக செய்திகள் எல்லாம் இன்று தடுப்பூசிகளால் கொரனாவுக்கு முடிவு கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து வருகின்றன.
நமது எதிர்காலம் என்னாவது?
விடிவு காலம் பிறக்கும் என நம்பலாமா?
பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
பல நாடுகள் அவற்றை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருகின்றன.
அதற்குள் வேறு பல புதிய நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இது கொள்ளை நோய்களின் காலம்.
இதுவே முடிவு காலம்.
வாழ்க்கை ஒரு மாயை.
வாழ்வது துயர் நிறைந்த வாழ்வை.
வரம் தருவது இறைவனின் கிருபை.
அவர் அண்டை சேர்வதே பெருமை.
வந்துவிடும் தடுப்பூசி
ஒழிந்துவிடும் கொரனா.
No one has commented yet. Be the first!