இந்த வருட முடிவில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதா?.
இந்த வருடத்தின் இறுதி நாட்கள் கர்த்தர் எங்களுக்குச் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கவேண்டும்
அடுத்த வருடத்திற்குள் நாங்கள் நுழையப் போகிறோம். புதிய வருடத்தை நன்மையால் நிரப்புகின்றவர். கர்த்தர்.
புதிய வருடத்தை ஆசீர்வதிக்கின்றவர் கர்த்தர். நாம் வாழும் ஆயிரம் நாட்கள் கர்த்தருக்கு ஒரு நாளைப் போல இருக்கிறது.
எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பதல்ல. வாழ்கின்ற நாட்களெல்லாம் கர்த்தருக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்
நாம் வாழவேண்டிய காலத்தை கர்த்தரே நிர்ணயம் செய்கிறார். மனிதன் பூரண ஆயுள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் சித்தமாக இருக்கிறது. நன்மையான எந்த ஈவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது. அவர் எம்மை கைவிடமாட்டார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையானவற்றை அனுமதிக்கிறார். அவர் மனிதனுக்கு தகாதவற்றை அனுமதிப்பதில்லை.
அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்டதனால் அவர் எம்மை புது சிருஷ்டியாக்குவார். அவருடைய கிருபை எம்மை நடத்துகிறது. அவருடைய கரம் எம்மை உயிர்ப்பிக்கிறது.
நாம் கர்த்தர் செய்தவைகளுக்காக நன்றி செலுத்துவதோடு வருங் காலங்களை அவரிடம் ஒப்படைப்போம். கர்த்தரே நம்மை நடத்தட்டும். அவர் எம்மை கவனிப்பார்.
No one has commented yet. Be the first!