தீமைகள் நிகழ்வதை கிறிஸ்தவர்கள் தடுக்க முடியுமா?
இவ்விதமான தீமைகள் ஏற்படுவதற்கு முன்னமேயே நாம் ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.
தீமையிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கு இறைவனால் மாத்திரமே முடியுமாக உள்ளது.
தீமையான விடயங்கள் நமக்கு நடந்து விடாதபடிக்கு நாம் ஜெபிக்கும்படியாக வேதாகமம் நமக்கு கற்றுத் தருகின்றது.
இயேசுவே அவர் கற்பித்த ஜெபத்தில் நமக்கு அக்காரியத்தை குறித்து தெளிவாக அறியத்தந்து ஜெபிக்க கட்டாயப்படுத்தியுள்ளார்,
இயேசு எங்கே இதை கூறியுள்ளார்?
மத்தேயு 6:13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,
இப்படி நாம் ஜெபிக்கும் போது என்ன நடக்கின்றது?
தீமையிலிருந்து எங்களை இரட்சியும் என நாம் ஜெபிக்கும் போதே தேவன் எம்மை அதிலிருந்து இரட்சிக்கின்றார்.
தேவன் எம்மை தீமையிலிருந்து இரட்சிப்பவரானதால் நாம் எப்போதும் அவரிடம் ஜெபிக்கின்றவர்களாகவும் அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களுமாய் இருப்போம்.
மத்தேயு 6:9-13
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே
No one has commented yet. Be the first!