நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்;
நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்;
நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
No one has commented yet. Be the first!