Fear God and keep his commandments,for this is the duty of all mankind.For God will bring every deed into judgment, including every hidden thing, whether it is good or evil.
தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
දෙවියන්ට ගරුබිය දක්වා, එතුමන්ගේ ආඥා පිළිපදින්න. මිනිසා මවන ලද්දේ ඒ සඳහා ය. අපේ සියලු රහස් හොඳ හෝ නරක හෝ වේ වා දෙවියන් වහන්සේගේ විනිශ්චයයට භාජනය වනු ඇත. Ecclesiastes பிரசங்கி 12:13-14 ධර්මදේශකයා
1 / 3
Tamil christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Monday, March 08, 2021

இக்காலத்து சபை மக்கள் அக்காலத்து யோனாவின் மக்களை பார்க்கிலும் மிகவும் கெட்டவர்களா ?

நாங்கள் ஏன் வேறு சபை மக்களை மிக தாழ்வாக பார்க்கிறோம் ?


நாங்கள் ஏன் வேறு சபை மக்கள் என பிரித்து பார்த்து பழக தயங்குகிறோம்?


நமது சபை மக்களுடன் மாத்திரமே நமது உறவு தொடர்ந்து இருந்து வருகிறது. வேறு சபை மக்களுடன் பழகத் தயங்குகிறோம்.


ஏன் நமக்கு இவ்வாறான சிந்தனை வருகிறது.  மற்ற சபை மக்கள் எமது பார்வையில் கீழாக காணப்படுகிறார்கள் .


நமது உறவு நமது சபை மக்கள் மீது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஏனைய  சபை மக்களோடு  நாம் உறவு கொள்ள மறுத்து விடுகிறோம். 


எமது சபை பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறோம்.


அன்று யோனா குறிப்பிட்ட மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு புறப்பட்டு சென்ற போதும் அவனது எண்ணம் இதே விதமாகவே காணப்பட்டது. 


அவர்கள் தனக்கு உரியவர்கள் அல்ல என்பது போல அவன் செயல்பட்ட விதத்தை நாங்கள் காண்கிறோம். 


எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் மக்கள் எப்படிப்பட்டவர் காணப்பட்டாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கவில்லை


ஆனால் கர்த்தராகிய இறைவன் அவர்களை நேசிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.  அவர்களை நேசிக்கிறார் அவர்கள் அவருடைய நற்செய்தியை கேட்பதற்கு அவர் விரும்புகிறார்.


யோனாவை போன்ற எண்ணம் கொண்டவர்களாக நாங்கள் மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். 


ஆனால் இறைவன் அந்த மக்களை தம் பக்கமாக சேர்ப்பதற்கு விரும்பி கொண்டிருக்கிறார்


அந்த இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 


எங்களால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. 


நாங்கள் எங்களது சிந்தனைகளால் மற்றவர்களை தூரம் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்


ஆனால்  வேறு சபை மக்கள் அசுத்தமானவர்கள் அல்ல.


அவர்கள் பரிசுத்தமானவர்கள் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அவர்களும் ஒருநாள் பரலோகத்திலே எம்மோடு இருக்கப் போகிறார்கள்.


ஆகவே எல்லா மக்களையும் நாம் எமது சகோதரர்களாக பார்த்து பழக வேண்டியதாக இருக்கிறது.


ஆகவே வேறு சபைகளையும் சபை மக்களையும் எமது சகோதரர்களாக சகோதரிகளாக எமது சபையின் அங்கத்தவர்களாக பார்ப்போம். ஏற்றுக்கொள்ளுவோம்,

நன்றி

Friday, February 12, 2021

இயேசுவானவர் உலகத்தின் கடைசிவரை தமது மக்கள் மத்தியில் வாசம் செய்யும் துாய தேவனை பற்றி கூறுவது என்ன ?

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; 

நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; 

நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; 

நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 

அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

ads

 movie.tamil.bid

Thursday, February 04, 2021

73rd Independence Day of Sri Lanka

இலங்கை நாட்டில் 73வது சுதந்திர தினம்

இலங்கை மக்கள் இன்று தங்கள் 73வது சுதந்திர தினத்தை  கொண்டாடி இருக்கிறார்கள். 

இலங்கை ஜனாதிபதி தனது உரையின் போது தான் இலங்கை சிங்கள-பௌத்த ரென்றும் மற்ற மதங்களுக்கு சம உரிமை உள்ளதாகவும் வாக்களித்திருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதல்களையும் வன்மையாக தனது உரையில் கண்டித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி. 

ஜனநாயகப் பாதையில் செல்லும் இலங்கை எதிராக செயற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக செயற்படும் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். 

 73வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Sunday, January 31, 2021

லூக்கா Luke 10:33-35, 37

But A Samaritan, As He Traveled, Came Where The Man Was; And When He Saw Him, He Took Pity On Him. He Went To Him And Bandaged His Wounds, Pouring On Oil And Wine. Then He Put The Man On His Own Donkey, Took Him To An Inn And Took Care Of Him.The Next Day He Took Out Two Silver Coins And Gave Them To The Innkeeper. 'Look After Him,' He Said, 'And When I Return, I Will Reimburse You For Any Extra Expense You May Have.' 

Jesus Told Him, "Go And Do Likewise." 

பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 

அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

Friday, January 22, 2021

தவறான விதத்தில் இந்த வரி சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று - மூன்று நாட்களாக தொடர்கிறது போதகர் போல் தினகரன் வீட்டில் சோதனை

தவறான விதத்தில் இந்த வரி சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகிறார்கள்

மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அதற்குரிய வரியை அரசாங்கத்துக்கு செலுத்தி இருக்க வேண்டும். வருமான வரி என்பது கட்டாயம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செலுத்த வேண்டிய தொகை. இது யாராக இருந்தாலும் அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

‘இயேசு அழைக்கிறார்’ சொந்தமான அடையாறு இல்லம், கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட உள்பட 28 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

முறையாக வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை உள்பட வீடு உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். 

இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் திடீரென பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட தமிழகத்தில் 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
சோதனையிலேயே பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் பணி செய்து வருகிறார் பால் தினகரன்.
சென்னை அடையாறிலுள்ள `இயேசு அழைக்கிறார்’ மிஷனரியின் தலைமை அலுவலகம், சென்னை பாரிஸிலுள்ள அலுவலகம், பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள், கோயம்புத்தூரிலுள்ள பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, தமிழகம் முழுவதும் `இயேசு அழைக்கிறார்’ மிஷனரிக்குச் சொந்தமான கட்டடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இரண்டு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. `இயேசு அழைக்கிறார்’ மிஷனரி, மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனால் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மதபோதகர் பால் தினகரன், அவரது குடும்பத்தினரால் அந்த மிஷனரி நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மத பிரசங்கங்களைத் தமிழகம் முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், `இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் இந்த தவறான முடிவு கண்டிக்கப்பட வேண்டியது

Tuesday, January 19, 2021

கர்த்தருக்குள் நித்திரையடைந்த அமரர் போல் சற்குணம்

கர்த்தருக்குள் நித்திரையடைந்த சுவிஸ் தேசத்தின் தேவ ஊழியர் அமரர் போல் சற்குணம் ஜயா அவர்களுக்கு www.tamil.bid ன் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, January 17, 2021

தீமையானது எம்மை அணுகாது இருக்க நாம் ஜெபிக்க வேண்டும். தேவனே எம்மை தீமையிலிருந்து இரட்சிப்பவர்.

கிறிஸ்தவர்களான எமக்கு தீமை ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளது.

தீமைகள் நிகழ்வதை கிறிஸ்தவர்கள் தடுக்க முடியுமா?

இவ்விதமான தீமைகள் ஏற்படுவதற்கு முன்னமேயே நாம் ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

தீமையிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கு இறைவனால் மாத்திரமே முடியுமாக உள்ளது.

தீமையான விடயங்கள் நமக்கு நடந்து விடாதபடிக்கு நாம் ஜெபிக்கும்படியாக வேதாகமம் நமக்கு கற்றுத் தருகின்றது. 

இயேசுவே அவர் கற்பித்த ஜெபத்தில் நமக்கு அக்காரியத்தை குறித்து தெளிவாக அறியத்தந்து ஜெபிக்க கட்டாயப்படுத்தியுள்ளார், 

இயேசு எங்கே இதை கூறியுள்ளார்?

இயேசு கற்பித்த பரமண்டல ஜெபத்தில் இது உள்ளடங்கியுள்ளது.

மத்தேயு 6:13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், 

இப்படி நாம் ஜெபிக்கும் போது என்ன நடக்கின்றது?

தீமையிலிருந்து எங்களை இரட்சியும் என நாம் ஜெபிக்கும் போதே தேவன் எம்மை அதிலிருந்து இரட்சிக்கின்றார்.

தேவன் எம்மை தீமையிலிருந்து இரட்சிப்பவரானதால் நாம் எப்போதும் அவரிடம்  ஜெபிக்கின்றவர்களாகவும் அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களுமாய் இருப்போம்.

மத்தேயு 6:9-13
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே 

Tuesday, January 12, 2021

இயேசுவை குத்தின கண்கள் காணும்

இயேசு தன் உயிரை தர மானிடனானார். 

அது அவர் சித்தமாய் காட்டினார்.


அவர் நமக்காய் வந்தார் என்றறிந்தோர்

வசனத்தினை கேட்பதற்காய் விரைந்தார்.


தம் பெயர் மறைவதை உணர்ந்தோராய்

பரிசேயர் அவரை பகைத்தார். 


மக்கள் முன் தலைவரானார்

மனம் விரும்ப விருந்தும் அளித்தார் இயேசு


தருணம் வர காட்டியே கொடுத்தார்

இறைமகன் இயேசு கைதானார்.


மக்கள் தலைவரால் சிலுவை எடுத்தார்

மனம் பதைத்தவரும் கைவிட்டு ஓடினர்.


தனியே சுமந்தார் பார சிலுவை

தவித்தே சரீரத்தை ஒப்புக் கொடுத்தார்,


சிலுவையில் அறைந்தார்

இயேசுவின் உயிரை பறித்தார்.


மரித்தவர் கல்லறையினின்று எழுந்தார்

கொன்றவர் திகைத்து நின்றார்.


உயிர்த்த உடலை காட்டி

நிம்மதியாய் வாழச் சொன்னார்


விடைபெற்றார் 2000 வருடத்திற்கு முன்

பரலோகம் சென்று மீண்டும் வருவார்.


அரசனாய் ஆள்வார் உலக மக்களை

காண்பாய் அவர் ராஜ மகிமையை.



(பரலோகிலிருந்து உலகில் பிறந்து வந்து, அற்புதம் செய்து மரித்து பின் உயிரோடழுந்து பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்து இராஜாதி இராஜனாய் திரும்ப உலகினை ஆளுகை செய்ய வரப்போகின்றார்.)(அரசன் இயேசு வர முன்னே அவரிடம் சேர வேண்டும், இல்லாவிட்டால் நித்திய தண்டனை தரப்படும்.)


Friday, January 08, 2021

ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பதே அவசியம்

எப்போதும் ஜாக்கிரதை உள்ளவர்களாய் கிறிஸ்தவர்கள் காணப்பட வேண்டும்.


எவற்றிற்கு ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்?


தேவ வசனத்தை பிரசங்கிக்க ஜாக்கிரதை வேண்டும்.

II தீமோத்தேயு 4:2  சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; 
II தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
II பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.


தேவ வார்த்தையை கவனிப்பதில் ஜாக்கிரதை வேண்டும்.

எபிரெயர் 2:1 ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.


வேலையில் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.


நித்திய ஜீவ இளைப்பாறுதலுக்கு செல்ல ஜாக்கிரதை வேண்டும்.

எபிரெயர் 4:11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
II பேதுரு 3:14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.


நன்மையை தேடுவதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
தீத்து 2:2 முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.


நற்கிரியை செய்வதற்கு ஜாக்கிரதை வேண்டும்.

தீத்து 3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; 
I தீமோத்தேயு 5:10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


ஜெபிக்க ஜாக்கிரதை வேண்டும்.

I பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.


(நியாயப்பிரமாணத்தை) தேவ கட்டளையை செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

II இராஜாக்கள் 21:8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.
உபாகமம் 4:10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.
உபாகமம் 11:22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,


தேவ ஆலயத்திற்குரிய தேவைகளை செலுத்த ஜாக்கிரதை அவசியம். (அர்தசஷ்டா ராஜாவின் கட்டளை)

எஸ்றா 7:23 பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; 


சபை மக்களுக்கு பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருத்தல்.

II கொரிந்தியர் 11:9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.


ஒற்றுமைக்காக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

எபேசியர் 4 1/3. ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.
I தீமோத்தேயு 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.


முடிவு பரியந்தம் ஜாக்கிரதை.

எபிரெயர் 6:12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
வெளி 3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

Sunday, January 03, 2021

நீ இனி அலைந்து திரிவதில்லை

கர்த்தருடைய பார்வைக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமானால் கர்த்தருடைய பாதையில் நாம் செல்ல வேண்டும்,

கர்த்தருடைய பாதையில் செல்லும் யாவரும் அலைந்து திரிய வேண்டுவதில்லை.

ஓய்வுநாளாகிய கர்த்தருடைய நாளில் அவரின் சித்தப்படி வாழ எம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்,

இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

எரேமியா 4:1-2



Thursday, December 31, 2020

கர்த்தர் தாமே புதிய வருடம் 2021இனை உங்களுக்கு ஆசீர்வாதமாக்குவாராக,

எமது வாசகர்களுக்கு,

2021 ஆசீர்வாதமான புதிய ஆண்டு நல்வாழ்த்துக்கள்,, 

கர்த்தர் தாமே இப்புதிய 2021ம் வருடத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவும், ஆசீர்வதிக்கவும் செழிக்கவும் செய்வாராக,

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனிக்கேயர் 3


http://www.tammil.co/ ன் புதுவருட வாழ்த்துக்கள்
இம்மானுவேல் இன்பநாதன் லிப்னி எஸ்ரோன்
அவுஸ்திரேலிய புது வருட கொண்டாட்டம் காணொளி



வருட முடிவிலும் தேவ ஆசி



2020க்கு கர்த்தருக்கு நன்றி என்று சொல்லுகிறோம்

இந்த வருட முடிவில் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க முடிகிறதா?.

இந்த வருடத்தின் இறுதி நாட்கள் கர்த்தர் எங்களுக்குச் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கவேண்டும் 

அடுத்த வருடத்திற்குள் நாங்கள் நுழையப் போகிறோம். புதிய வருடத்தை நன்மையால்  நிரப்புகின்றவர். கர்த்தர். 

புதிய வருடத்தை ஆசீர்வதிக்கின்றவர் கர்த்தர். நாம் வாழும் ஆயிரம் நாட்கள் கர்த்தருக்கு ஒரு நாளைப் போல இருக்கிறது. 

எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பதல்ல. வாழ்கின்ற நாட்களெல்லாம் கர்த்தருக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்

நாம் வாழவேண்டிய காலத்தை கர்த்தரே நிர்ணயம் செய்கிறார். மனிதன் பூரண ஆயுள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே கர்த்தரின்  சித்தமாக  இருக்கிறது. நன்மையான எந்த ஈவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது. அவர் எம்மை கைவிடமாட்டார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மையானவற்றை அனுமதிக்கிறார். அவர் மனிதனுக்கு தகாதவற்றை அனுமதிப்பதில்லை.

அவர் கரத்தால் சிருஷ்டிக்கப்பட்டதனால் அவர் எம்மை புது சிருஷ்டியாக்குவார். அவருடைய கிருபை எம்மை நடத்துகிறது.  அவருடைய  கரம் எம்மை  உயிர்ப்பிக்கிறது.

நாம் கர்த்தர் செய்தவைகளுக்காக நன்றி செலுத்துவதோடு வருங் காலங்களை அவரிடம் ஒப்படைப்போம். கர்த்தரே நம்மை நடத்தட்டும்.  அவர் எம்மை கவனிப்பார். 




Wednesday, December 30, 2020

கொரனாவும் தடுப்பூசியும் : மரணத்தை காத்திருந்து பெற்றுக்கொள்ளும் காலமா?

உலகம் இன்று மிகவும் போராடி வருகின்றது. 

ஏன்? 
எதற்காக? 

உலகின் பயங்கர கொலையாளியாக மாறியிருக்கும் கொரனா என்னும் கொடிய அரக்கனை கண்டு பயந்து இருக்கிறது.

உலகில் கொலையாளியாக மக்களைத் தினம் தினம்  வாட்டி வதைக்கிறது இந்த எதிரி.
ஒளிந்திருந்து காரியத்தை கச்சிதமாக முடிக்கிறது.


எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காதவரும்  எதிர்காலத்தை நினைத்து வருந்துகிற

அவல நிலைக்குள் நம்மை தள்ளி இருக்கிறது.

அரக்கனை அழிக்கும் வண்ணமாக  உலகில் விஞ்ஞானிகள் போராடி வருகின்றார்கள். 

உலக செய்திகள் எல்லாம் இன்று தடுப்பூசிகளால் கொரனாவுக்கு முடிவு கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து வருகின்றன. 


நமது எதிர்காலம் என்னாவது?


விடிவு காலம் பிறக்கும் என நம்பலாமா?

பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.


பல நாடுகள் அவற்றை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருகின்றன.

அதற்குள் வேறு பல புதிய நோய்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது.


இது கொள்ளை நோய்களின் காலம்.

இதுவே முடிவு காலம்.


வாழ்க்கை ஒரு மாயை. 

வாழ்வது துயர் நிறைந்த வாழ்வை. 


வரம் தருவது இறைவனின் கிருபை. 

அவர் அண்டை சேர்வதே பெருமை.


வந்துவிடும் தடுப்பூசி

ஒழிந்துவிடும் கொரனா.





இஸ்ராயேலின் முன் குறித்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் கிறிஸ்துவின் முதல் வருகை

முதல் தீர்க்கதரிசனம் . 
அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3/15


யாக்கோபின் முன்னறிவித்தல் . 
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
ஆதியாகமம் 49/10


பிலேயாமின் எதிர்வுகூறல்
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும். யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான்.
எண்ணாகமம் 24/17,19

Friday, December 25, 2020

கிறிஸ்மஸ் செய்தி கிறிஸ்துவின் பிறப்பு

2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5

5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.
எரேமியா 23

11 சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
சங்கீதம் 72

9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
10 எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்
12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
சகரியா 9

கிறிஸ்மஸ் ஆராதனை

இன்றைய கிறிஸ்மஸ் ஆராதனையின் பின்னரான ஒன்றுகூடலின் போது சபை மக்கள் 

இலங்கை திருச்சபை மக்கள் ஆராதனையின் பின்னர் ஒன்றுகூடி எடுத்த படம் ,

படக்காட்சி 



Thursday, December 24, 2020

2020 கிறிஸ்மஸ் தின பரிசளிப்பில் எடுத்த சில படங்கள்

இலங்கை கிறிஸ்மஸ் தின நிகழ்வுகள் 

2020 டிசம்பர் மாதம் 22ம் திகதியும் 23ம் திகதியும் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின பரிசளிப்பில் பல மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன, 

நிகழ்வுகள் கொரனா காரணமாக நடத்தப்படவில்லை, பிள்ளைகளுக்கு 

பரிசாக பாடசாலை பொருட்களும் நிவாரண பொருட்களும் கொடுக்கப்பட்டன, பிள்ளைகள் வறிய குடும்பத்தை சார்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களை சேர்ந்தவர்கள், 

இடம் / இலங்கை, கிழக்கு மாகாணம், ஏறாவூர் பற்று, செங்கலடி,  

பரிசளிப்பு 


பரிசளிப்பு 


பரிசளிப்பு 


பரிசளிப்பு 


Friday, December 18, 2020

உபாகமம் அதிகாரம் 6

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி, நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 

இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு. 

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக. நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும், கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்; நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி, தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

Wednesday, December 16, 2020

நம் நாட்டின் ஆசீர்வாதத்திற்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்,

நாம் வாழ்கின்ற நாட்டில் நடைபெறுகின்ற குழப்பங்கள், போராட்டங்கள் என எவைகள் காணப்பட்டாலும் நாம் நமது தேசத்துக்காக ஆசீர்வதித்து ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது,

நாங்கள் எந்த இடத்தில் வாழ வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறாரோ அந்த இடத்தில் நம்மை முழுவதுமாக ஆசீர்வதித்து நமது தேவைகளை சந்திக்க வல்லவராக இருக்கிறார், அவர் எங்களோடு கூட இருக்கிறார், எங்களை வழி நடத்துகிறார் எங்களை பாதுகாக்கிறார்,

நமது கர்த்தர் நமக்கு ஏற்படுத்தியே இடத்திலே நம்மை ஆசீர்வதிக்க வல்லவர், நமக்கான ஆசீர்வாதம் உண்டு என்று நாம் புதிய இடங்களைத் தேடி செல்லவேண்டிய தேவையில்லை, வேறு இடங்களில் நாங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,

உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

உபாகமம் 32'8

Friday, December 11, 2020

தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸின் குடியரசு மதிப்பீடுகளை ஆதரிக்கும் சட்டம், இணையத்தில் வெறுப்புரைகளை கட்டுப்படுத்தும், இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை விதிக்கும், வீட்டு முறைப் பள்ளிகளின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதை இந்த சட்டம் தடுக்கும்.
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அதிபர் இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது.
இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், இதனை 'பாதுகாக்கும் சட்டம்' என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் என்கிறார்.
சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்துக்கான எதிர்வினையாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்டூனைக் காட்டியதற்காக ஒரு நபர் அவரை கொலை செய்தார்.
இஸ்லாமிய அமைப்புகளின் நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையைக் கோரும் புதிய விதிகள் இந்த சட்டத்தில் இருக்கின்றன.
பிரான்ஸ் அதிகாரிகள், பணியிடங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது எனும் விதிமுறை போக்குவரத்துப் பணியாளர்கள் , சந்தை ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்த சட்டம் வழியாக விரிவுபடுத்தப்படுகிறது.
இஸ்லாம் சிக்கலில் இருக்கிற ஒரு மதம் என்று முன்பு ஒரு முறை குறிப்பிட்ட அதிபர் மக்ரோங், முகமது நபியின் கார்டூனை ஷார்லீ எப்டோ பத்திரிகை வெளியிட்ட விவகாரத்தில் அந்தப் பத்திரிகையின் உரிமையை ஆதரித்தவர் அவர்.
பிரான்சில் ஐம்பது லட்சம் முஸ்லிம் மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே அதிக முஸ்லிம் சிறுபான்மையினரை கொண்ட நாடு இது.
பல முஸ்லிம் நாடுகளில் இந்த சட்டத்துக்காக மக்ரோங் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். துருக்கியோடு ஏற்கெனவே கெட்டுப்போன பிரான்சின் உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் முஸ்லிம்கள் மீதான ஒவ்வாமையை அதிகரிக்கும் என்று உள்நாட்டிலும்கூட இடதுசாரி அரசியல் வாதிகள் எச்சரித்துள்ளனர்.
கடுமையான நடவடிக்கை எடுக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கூறியுள்ளார் மத சுதந்திரத்துக்கான அமெரிக்கத் தூதுவர் சாம் பிரௌன்பேக்.


Thursday, December 10, 2020

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும், இலங்கையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தம்மிடம் தகவல் உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் ஹரின் பெர்ணான்டோ சபையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய சரத் வீரசேகர, ஆம் என பதில் கூறினார்.
எனினும், ரகசியங்களை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலுள்ள சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 257 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.
அவர்களில் 86 பேர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அது தொடர்பிலான தகவல்களுடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துகின்றமை குறித்து தான் சட்ட மாஅதிபரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் அடங்குவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே. நாடாளுமன்றத்தில் தற்போது புதிய தகவல்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
x

Monday, December 07, 2020

கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்

அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். 

உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவாலாக கிறிஸ்துவின் இராஜரீகமான வருகை அமையவுள்ளது. இயேசுவை எதிர்த்தோர் அவரை காணப்போகின்றார்கள். இயேசுகிறிஸ்துவை ஏசியவர்கள், எதிர்த்தவர்கள், அவமதித்தவர்கள் அவரைக் காணப்போகின்றார்கள். 

அப்போது அவர்களின் நிலை என்ன? மத்தேயு 25:31ல் கூறப்படும் இக்காரியம் எதைப்பற்றி கூறுகின்றது. உலகிற்கு இறைவன் மனித சாயலாக மனிதன் காணும் வண்ணமாகவே வந்ததால் அவரது வெளிப்பாடு இங்கு மனுஷகுமாரன் எனப்படுகின்றது. 

இயேசுக்கிறிஸ்துவே இவ்வுலகின் படைப்பாளராவார். அவர் பாவிகளின் கைகளினால் மரணத்தை தழுவினார். ஆனாலும் அவர் இறைவன் என்பதினால் மரணத்திலிருந்து ஜெயம்கொண்டவராக மனுஷகுமாரன் உயிரோடு எழும்பினார். 

மரணம் மனிதர்களை மாத்திரமே மரணிக்க வைக்கலாம். இறைவனால் மனிதனுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்ட மரணத்தை இறைவன் மனிதன் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக மனிதனாக வந்து மரணத்தை எதிர்கொண்டு வெற்றி சிறந்து காட்டினார். 

இது இயேசுவை கொலைசெய்த மனிதர்களுக்கு கிட்டிய வெற்றியல்ல. மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிக்கத்தக்கவர் தான் என்பதை காட்டிக்கொடுத்த கிறிஸ்துவின் வெற்றியே ஆகும். 

இவ்வாறு மரணத்தை வெற்றிகொண்ட இறைவனை விசுவாசிப்பதன் மூலமாக நாமும் மரணத்தை வெற்றிக்கொள்ள முடியும். புதிய நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான சந்தர்ப்பமே இங்கு தரப்படுவதற்காகவே உள்ளது. 

கிறிஸ்து உலகிற்கு வரப்போகும் நாள் மிகவும் தொலைவிலில்லை. அது மிகவும் அருகிலிருக்கின்றது. அந்நாளை யாரும் அறியார். சிலவேளைகளில் இதை நீங்கள் வாசிக்கும் முன்னதாகவோ கூட இடம்பெற்றிருக்கலாம். 

அவரது வருகை பரிசுத்த தூதரோடுங்கூட இருக்கும் என வேதாகமம் கூறுகின்றது. அவர் சீக்கிரம் வரப்போகின்றார் என ஏற்கனவே வேதாகமம் எச்சரிக்கின்றது. இவ்வித தீர்க்கதரிசனங்களைக் கொண்ட புத்தகமாக இன்று இந்த உலகில் வேதாகமம் மட்டுமே உள்ளது. 

கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் எதிர்கால நோக்கை கொண்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே. அவருடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் சிலுவையில் அறையப்பட்ட கிறஸ்து இப்போது இராஜாவாக வீற்றிருக்கின்றார். 

இப்போது அவரை பற்றி நோக்குங்கள். அவரை சிலுவையில் அறைந்தவர்கள் அவர் முன் கைகட்டி நிற்க வேண்டி ஏற்படும். கிறிஸ்துவின் உயிர்ப்பை விசுவாசியாதவர்கள் அவர் முன் மௌனிகளாக இருக்க வேண்டி ஏற்படும். 

இயேசுவை அறிந்தும் அவரது செய்தியை தள்ளிய நீங்களும் அவருக்கு முன் என்ன செய்யப் போகின்றீர்கள்? அவர் இனி இராஜாவாக வாரப்போகின்றார். 

எப்போது அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரோ அப்போதிருந்தே அவர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து இந்த உலகை நோக்கிக்கொண்டிருக்கின்றார். 

இன்றைய நாட்களில் நாம் அவரது செயற்பாடுகளை அறிந்து கொள்கின்றோம். 
எவ்வாறு? கிறிஸ்து இன்றும் சபைகளில் தம்முடைய மக்களோடு பேசிக்கொண்டிருக்கின்றார். 
ஏன்? இன்னும் மக்கள் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டாலும் அவரை ஏற்க விரும்பவில்லை. 

வெறுமனே அற்புதங்களை மாத்திரம் நிகழ்த்தி தமது மாபெரும் மேன்மையை நீரூபிக்க வேண்டிய தேவை கொண்டவரல்ல சிங்காசனத்திலிருக்கும் இறைவன். அவரால் இந்த உலகை எவ்வாறு உருவாக்கினாரோ அவ்வாறு அழிக்கவும் முடியும். 

ஆயினும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றார். அவர் சீக்கிரமாய் வரப்போகின்றார். 

அவரது வருகை இப்போதும் நிகழலாம். செய்யவேண்டியது ஒன்றே அவரை விசுவாசிப்பது மாத்திரமே. 

உங்களை ஆளுகிறவர்களை விட  வல்லமையுள்ளவர் வரும்போது எவ்வாறு அவர்களுக்கு ஆதரவளிப்பீர்களோ அவ்வாறு இந்த இறைமகனுக்கு ஆதரவளியுங்கள். 

அப்போது உங்கள் மரணத்தின் பின்னதான வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்துவோடு பரலோகில் உங்கள் நித்திய வாழ்க்கையை களிக்க முடியும்.

Jesus coming very soon



Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *


Sri Lanka Tamil Typesetting, English to Tamil Translation, Sinhala to Tamil Translations, Type setting, Book Printing,, Page maker, Corel draw, Mobile: +94 775076775 & ezcash, http://tamiltranslation.tk/, https://sites.google.com/view/typesettingintamil94775076775, https://uyir.business.site/, https://tamiltypesetting.godaddysites.com, සිංහල, ඉංග්රීසි සිට දෙමලට පරිවර්තනය .. சிங்களம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு சேவை .. Tamil Translations, from Sinhala & English, with Typesetting, from Colombo. மொபைல் +94775076775, ( hezron libn, lipni22, libni hezron, lipni, uyir, uyiron ) . . http://tamil.cf . Christian . . . http://tamil.gq . Tamil . . . http://lipni-hezron.tk . Sri Lanka . . . http://libni-hezron.tk . News . . . http://libnihezron.tk . Net . . . http://libni.tk . google . . . http://lipni.tk . USA . . . http://uyir-tamil.tk . UK . . . http://lipni-tamil.tk . Tamil . . . http://tamiltranslation.tk . search . . . http://tamiltranslation.ml . Tamilchristian . . . http://tamiltranslation.ga . lanka . . . http://tamiltranslation.cf . Sri . . . http://tamiltranslation.gq . blog . . . http://clj2c.tk . new . . . http://lankatour.tk . like . . . http://tammil.tk . page . . . http://tammil.ml . free . . . http://tammil.ga . link . . . http://tammil.cf . corona . . . http://tammil.gq . usd . . . http://pasikudahtours.tk . paypal . . . http://christiantamil.tk . money . . . http://uyirchristian.tk . translate . . . http://christianlk.tk . Work . . . http://uyir.tk . end . . . http://uyirchristiannet.tk . time . . . . . http://contact.tammil.co . ministry . . . http://facebook.tammil.co . facebook . . . http://Youtube.tammil.co . yourtube . . . http://main.tammil.co . tammil . . . http://paypal.tammil.co . paypal . . . http://Publication.tammil.co . book . . . http://twitter.tammil.co . Twitter . . . http://top-up.tammil.co . reload . . . Christian . . Tamil . . Sri Lanka . . News . . Net . . google . . USA . . UK . . Tamil . . search . . Tamilchristian . . lanka . . Sri . . blog . . new . . like . . page . . free . . link . . corona . . usd . . paypal . . money . . translate . . Work . . end . . time . . . . ministry . . facebook . . yourtube . . tammil . . paypal . . book . . Twitter . . reload